/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தென்னை நார் கழிவில் தீ; 3 கி.மீ.,க்கு புகை
/
தென்னை நார் கழிவில் தீ; 3 கி.மீ.,க்கு புகை
ADDED : செப் 18, 2025 06:26 AM

வத்தலக்குண்டு : எம்.வாடிப்பட்டி தரிசு நிலப் பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டிருந்த தென்னை நார் கழிவுகளில் தீ பரவ 3 கி.மீ.,க்கு புகை தென்பட்டது.
இப்பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த தென்னை நார் கழிவுகள் அனைத்திலும் தீ பரவியது. கொழுந்து விட்டு எறிந்த தீயால் அப்பகுதியில் பெரும் புகைமூட்டம் கிளம்பியது.
தீயணைப்பு வாகனம் செல்ல முடியாது தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் சிறு தண்ணீர் வண்டிகள் மூலம் தீயானது மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.
ஐந்து மணி நேரத்துக்கு மேலாக எரிந்ததால் இதில் ஏற்பட்ட புகை 3 கி.மீ., சுற்றளவுக்கு பரவியது. இதனால் குடியிருப்பு வாசிகள்,வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். தென்னை கழிவுகள் முழுவதுமாக எரிந்த பின்பே புகையின் தாக்கம் குறைந்தது.