/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு,தனியார் பஸ்களில் பயணிகளை ஏற்றுவதில் போட்டா போட்டி; வேகமாக செல்வதால் அதிகரிக்கிறது விபத்துக்கள்
/
அரசு,தனியார் பஸ்களில் பயணிகளை ஏற்றுவதில் போட்டா போட்டி; வேகமாக செல்வதால் அதிகரிக்கிறது விபத்துக்கள்
அரசு,தனியார் பஸ்களில் பயணிகளை ஏற்றுவதில் போட்டா போட்டி; வேகமாக செல்வதால் அதிகரிக்கிறது விபத்துக்கள்
அரசு,தனியார் பஸ்களில் பயணிகளை ஏற்றுவதில் போட்டா போட்டி; வேகமாக செல்வதால் அதிகரிக்கிறது விபத்துக்கள்
ADDED : செப் 11, 2025 07:29 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு ,தனியார் பஸ்களுக்கு இடையே பயணிகளை ஏற்றி செல்வதில் கடும் போட்டி காரணமாக சாலை விபத்துக்கள் அதிகம் நடக்கிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் பொதுமக்கள், வியாபாரிகள், தினசரி வேலைக்கு செல்வோர் என பலரும் பொதுப்போக்குவரத்தை நம்பியே உள்ளனர். ரயிலை விட பஸ் போக்குவரத்தின் மூலம் கிராமங்களுக்கும் சென்றுவர வசதியாக உள்ளதால் ம பெரும்பாலானோர் அரசு, தனியார் பஸ்களில் வாடிக்கையாக செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அரசு, தனியார் பஸ்களுக்கு இடையே நேர மேலாண்மை , பயணிகளை ஏற்றி, இறக்குவதில் ஏற்படும் கடும் போட்டி காரணமாக சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளால் பொதுமக்கள் ரோட்டில் நடக்கவே அச்சப்படும் நிலை உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் பஸ்கள் வெளியேறுவதில் அரசு, தனியார் பஸ் ஊழியர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்குள் ஏற்படும் போட்டி மனப்பான்மையால் சாலையில் அதி வேகத்தில் பஸ்சை ஓட்டுவதோடு ஒருவரை ஒருவர் முந்திச்சென்று பயணிகளை ஏற்றி இறக்குவதில் டிரைவர்கள் முனைப்பு காட்டுகின்றனர்.வேலை அவசரம், நேர மிச்சம் என்பதற்காக முதலில் வரும் பஸ்சில் ஏறி பயணிக்கும் மக்கள்தான் அறியாமையால் டிரைவர்களின் போட்டிகளுக்கு நடுவே சிக்கி தவிக்கின்றனர். நேற்று மட்டும் நத்தம் கோபால்பட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் பஸ் டூவீலர் விபத்துக்களில் 3 பேர் இறந்தனர். இதுதவிர வாகன விபத்தில் காயங்களுடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஏராளம். அரசு, தனியார் பஸ் ஊழியர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும். வேகத்தை குறைத்து பாதுகாப்பாக பஸ்சை இயக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
.........
அவசியம் வேக கட்டுப்பாட்டு கருவி
மதுரை, உசிலம்பட்டி, பழநி, திருச்சி, கரூர், வத்தலகுண்டு உள்ளிட்ட முக்கியப்பகுதிகளுக்கு திண்டுக்கல்லில் இருந்து 5 நிமிட இடைவெளியில் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. டிக்கெட் கலெக் ஷனுக்காக கூடுதல் பயணிகளை ஏற்றுவதில்தான் அரசு, தனியார் பஸ் ஊழியர்களுக்கு இடையே பிரச்னை உருவாகிறது. சமீபத்தில் இதுபோன்ற பிரச்னைக்குத்தான் வேடசந்துார் ரோட்டில் பஸ் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.விபத்துக்களை குறைக்கவும் சீரான வேகத்தில் இயக்கவும் பஸ்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தவேண்டும் என அரசு உத்தரவிட்டது. ஆனால் பஸ்களில் பெயருக்கு வேகக்கட்டுபாட்டு கருவி பொருத்திவிட்டு ஆர்.டி.ஓ., ஆய்வு முடிந்ததும் அதை செயலிழக்க செய்துவிடுகின்றனர். இந்த விதிமீறலையும் வேறுவிதமாக அவர்கள் சரிகட்டுகின்றனர். மின்னல் வேகத்தில் சீறிபாயும் தனியார் பஸ்களால் மதுரை, திண்டுக்கல் வழித்தடத்தில்தான் அதிகளவில் விபத்து நடக்கிறது.
ரவி, சி.பி.ஐ. எம்.எல்., மாவட்ட நிலைக்குழு உறுப்பினர்,திண்டுக்கல் .
............