/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சரி செய்யலாமே: அலைபேசி சேவைகளில் தொடர் இடையூறு: நித்தம் பாதிப்பால் வாடிக்கையாளர்கள் அவதி
/
சரி செய்யலாமே: அலைபேசி சேவைகளில் தொடர் இடையூறு: நித்தம் பாதிப்பால் வாடிக்கையாளர்கள் அவதி
சரி செய்யலாமே: அலைபேசி சேவைகளில் தொடர் இடையூறு: நித்தம் பாதிப்பால் வாடிக்கையாளர்கள் அவதி
சரி செய்யலாமே: அலைபேசி சேவைகளில் தொடர் இடையூறு: நித்தம் பாதிப்பால் வாடிக்கையாளர்கள் அவதி
ADDED : அக் 04, 2025 03:59 AM

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டத்தில் அலைபேசி சேவைகளில் தொடரும் இடையூறுகளால் வாடிக்கையாளர்கள் நித்தம் அவதியடைகின்றனர்.
நவீன தொழில்நுட்ப யூகத்தில் அலைபேசி சேவை என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. பி.எஸ்.என்.எல்., உட்பட தனியார் நிறுவனங்கள் அலைபேசி சேவைகளை அளித்து வருகின்றன. 5ஜி சேவைகள் ஓராண்டுக்கு முன் துவங்கப்பட்டதால் தொழில்நுட்ப ரீதியாக சேவையின் தரத்தை உயர்த்துவதற்காக ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டு சேவையின் தரத்தை உயர்த்துவதற்காக தொழில்நுட்ப ரீதியான பணிகளை மேற்கொண்டது.மேலும் மாதந்தோறும் ரீசார்ஜ் கட்டணத்தையும் உயர்த்தியது.தொலைத்தொடர்புத் துறை வழிகாட்டுதலின்படி சேவையின் தரம் துல்லியமாக இல்லாமல் அழைப்புகளை பெறுவதிலும், அழைப்பதிலும் சமீபமாக இடையூறுகள் நிகழ்கின்றன.
அழைப்புகளை மேற்கொள்ளும் போது எதிரே தொடர்பு கொள்பவரின் பேச்சு மட்டுமே கேட்கும் நிலையில் அழைத்தவரின் பேச்சு கேட்காத நிலை உள்ளது.மேலும் அருகருகே அழைத்தாலும் நாட் ரீச்சபிள்,ஸ்விட்ச் ஆப், பிஸி என பதில் வருகிறது. தொடர்ந்து அலைபேசியில் பேசும் நிலையில் அழைப்புகள் துண்டிக்கப்படுகிறது.இது போன்ற நிலை மாவட்டம் முழுவதும் பரவலாக உள்ளதால் வாடிக்கையாளர்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்.இப் பிரச்னை பி.எஸ்.என்.எல்.,, அலைபேசி சேவை அளிக்கும் தனியார் நிறுவனங்களிலும் தொடர்ந்து வருவதால் வாடிக்கையாளர்கள் வெகுவாக பாதித்துள்ளனர்.மாதந்தோறும் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்படும் நிலையில் சேவையின் தரத்தை உயர்த்துவதில் மெத்தன நிலை உள்ளது. இந்நிலையை தவிர்க்க மாவட்ட தொலை தொடர்பு துறை அலைபேசி சேவையில் உள்ள குறைபாடுகளை கலைந்து தடையற்ற சேவை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
.........
தேவை துல்லியமான சேவை
ஓராண்டுக்கு மேலாக அலைபேசி சேவைகளில் இடையூறுகள் தொடர்கின்றன.தொடர்ந்து அழைப்புகளை மேற்கொள்வதற்கு அழைப்புகள் தொடர்பு கொள்வதிலும் சிக்கல் நீடிக்கிறது. மாதந்தோறும் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போதும் சேவையின் தரம் பின்தங்கியே உள்ளது. இணையதள சேவைகளும் துரிதமாக கிடைக்காத நிலை உள்ளது. இதனால் அலைபேசி சேவைகளை பயன்படுத்துவதில் ஏராளமான இடர்பாடுகள் ஏற்படுகின்றன. தொலைத்தொடர்பு துறை பி.எஸ்.என்.எல்., இதர அலைபேசி சேவை அளிக்கும் தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணித்து துல்லியமான சேவைகளை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவிக்குமார், இயற்கை ஆர்வலர், கொடைக்கானல்.
..........