/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
லஞ்சம்: வி.ஏ.ஓ.,க்கு 2 ஆண்டு சிறை
/
லஞ்சம்: வி.ஏ.ஓ.,க்கு 2 ஆண்டு சிறை
ADDED : மே 27, 2025 04:40 AM

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் நிலத்துக்கு பட்டா ஆவணங்களை வழங்க ரூ.1200 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,-வுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செந்துறையைச் சேர்ந்தவர் மாசிலாமணி. 2007ல் தன் நிலத்துக்கு பட்டா, சிட்டா, அடங்கல், வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை பெற அப்போதைய வி.ஏ.ஓ., பவுருதீனை அணுகினார். ஆவணங்களை வழங்க பவுருதீன் ரூ.1200 லஞ்சம் கேட்டார். இதனால் மாசிலாமணி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். லஞ்சம் பெற முயன்ற பவுருதீனை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் (ஊழல் தடுப்பு)நடந்தது. பவுருதீனுக்கு 2 ஆண்டுகள் சிறை, ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தலைமை குற்றவியல் நீதிபதி கனகராஜ் தீர்ப்பளித்தார்.