இல்லம்தேடி கல்வி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த மனு
இல்லம்தேடி கல்வி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த மனு
ADDED : ஜூன் 16, 2026 04:32 AM

தர்மபுரி; தர்மபுரி மாவட்டத்தில், இல்லம் தேடி கல்வி திட்-டத்தை தொடர்ந்து நடைமுறை படுத்தக்கோரி, தன்னார்வலர்கள் நேற்று கலெக்டர் அலுவல-கத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்ய கடந்த, 2021 டிச., மாதம் இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில், 1 முதல், 8ம் வகுப்பு வரை, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தன்-னார்வலர்கள் மூலம், மாலைநேர வகுப்புகள் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, 6 முதல், 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான வகுப்பு நிறுத்தப்பட்டது. 1 முதல், 5ம் வகுப்பு வரையி-லான மாணவர்களுக்கு, 50,000 தன்னார்வலர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.இந்த திட்டத்தில் மூலம் அவ்வப்போது, அரசு பள்ளி மாணவர்களின் காலணி அளவீடு, பழங்கு-டியினர் சமூக பொருளாதார கணக்கெடுப்பு, அன்பு கரங்கள், மாற்றுத்திறனாளி கணக்கெடுப்பு, மாண-வர்கள் இடைநிற்றல் கணக்கெடுப்பு உள்ளிட்ட-வற்றில் பணியாற்றி வருகிறோம். எவ்வித எதிர்-பார்ப்புமின்றி பணிபுரியும் எங்களுக்கு, இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு, மனுவில்
தெரிவித்திருந்தனர்.
