ADDED : ஏப் 05, 2026 05:59 AM
அ நிறம் | அளவு
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில், கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் அடித்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை, 5:45 மணி முதல், அரூர் மற்றும் தொட்டம்பட்டி, அச்சல்வாடி, ஒடசல்பட்டி, கூக்கடப்பட்டி, மோப்பிரிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் பரவலாக இடி, மின்னல் மற்றும் காற்றுடன் மழை பெய்தது.
இதனால், வயல்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதுடன், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. காற்றால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. நேற்று பெய்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
