நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : மேல் புவனகிரி மீனாட்சி உடனுறை வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை (4ம் தேதி) நடக்கிறது. அதனையொட்டி, நேற்று முன்தினம் 1ம் தேதி காலை 7:00 மணிக்கு மகாகணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. நேற்று 2ம் தேதி முதல் யாகசாலை பூஜை துவங்கியது. இன்று 3ம் தேதி இரண்டாம் யாகசால பூஜை நடக்கிறது.
நாளை 4ம் தேதி காலை கோ பூஜை மற்றும் நான்காம் யாகசாலை பூஜையும், தொடர்ந்து கடம் புறப்பாடாகி 11:05 மணிக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது.