ADDED : பிப் 27, 2026 05:11 AM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: இந்திய கம்யூ., சார்பில் மத்திய அரசை கண்டித்து கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.
கம்மாபுரம் ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சிகாமணி தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் தனவேல், மாவட்ட செயலாளர் ராஜசங்கர் முன்னிலை வகித்தனர். மத்திய கமிட்டி உறுப்பினர் பாலசுந்தரம் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினார்.
அதில், கடனில் இருந்து விடுதலை, வேலையின்மையில் இருந்து விடுதலை ஆகியவற்றை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கிராம மக்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கோஷமிட்டனர். கம்மாபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
