ADDED : மே 27, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
கடலுார்: போலீஸ் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்கத்தொகையினை எஸ்.பி., வழங்கினார்.
கடலுார் மாவட்ட போலீஸ்துறையில் பணியாற்றும் போலீஸ் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் பிள்ளைகளுக்கான, பட்டப்படிப்பு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி, எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது.
கல்வியில் சிறந்து விளங்கிய மோகனாஸ்ரீ, சுபா, இளையநிலா, ஹோனிஷா, ஜனனி, அபிவர்ஷா, ஹரிஹரன், சந்தியா, சுஜிதா ஆகியோர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை எஸ்.பி., ஜெயக்குமார் வழங்கி வாழ்த்தினார்.
