ADDED : ஜூன் 19, 2026 05:16 AM

ஆண்டு விழா அகில உலகப்பெண்கள் ஆன்மீகக் கல்வி அறக்கட்டளை மற்றும் வடகோவை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில், 32 ம் ஆண்டு விழா நடக்கிறது. குருவே துணை, வாழ்க வையகம், வாழ்க வளமுடன் என, வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகளை பின்பற்றும் யோக கலையை பின்பற்றுவோர் பங்கேற்கலாம்.
இடம்: வடகோவை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை: தேதி: 21 நேரம்: மாலை 5.00 மணி முதல்: 7.00 மணி வரை: சிறுதுளி கோவையில் உள்ள ஒரு முக்கியமான நகர்ப்புற நீர்வழித்தடம் காந்திமாநகர் ஓடையாகும். காந்திமாநகர் காவல் நிலையம் அருகே உருவாகி, பன்மால், பி.எஸ்.ஜி மருத்துவமனைகள் மற்றும் திருச்சி சாலை உழவர் சந்தை வழியாகப் பாய்ந்து, இறுதியாக இருகூர் ஏரியில் கலக்கிறது. கழிவுநீர் வரத்து, திடக்கழிவு கொட்டுதல், ஆக்கிரமிப்புத் தாவரங்களின் வளர்ச்சி மற்றும் கரைகளின் சிதைவு ஆகியவற்றால் இந்த ஓடை பாதிக்கப்பட்டுள்ளது.இதை சீரமைக்கவும், காந்திமாநகர் நீரோடையை பாதுகாக்கவும் புதிய திட்டத்தை கோவை மாநகராட்சியுடன் இணைந்து சிறுதுளி துவங்கி உள்ளது.
இடம்: ஜிவி ரெசிடென்சி நுழைவுப் பாலம்: தேதி: 21 காலை 7 மணி முதல்: அரசு பொருட்காட்சி குடும்பத்துடன் சென்று குதுாகலாமாக பொழுதை கழிக்க, அரசு பொருட்காட்சி நடக்கிறது. பார்த்து ரசிக்க, வேடிக்கையாக பொழுதை கழிக்க, பல சிறப்பு அம்சங்களுடன் அரங்குகள் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாட ஜெயிண்ட் வீல், டோரோண்டோ ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.
இடம்: வ.உ.சி.: மாலை: 3:00 மணி முதல் இரவு 10 மணி வரை.: நுால் வெளியீடு தமிழ்நாடு இலக்கியப் பேரவையின், 396- வது இலக்கிய சந்திப்பு கூட்டம் நடக்கிறது. இதில் பேராசிரியர் குழந்தைசாமி எழுதிய 'உள்ளத்தனையது உயர்வு' என்ற நுால் வெளியிடப்படுகிறது. கோவை வின்ட் ப்ளஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் கருணாமூர்த்தி நீதிமணி நுாலை வெளியிடுகிறார். தமிழ்நாடு இலக்கியப் பேரவையின் தலைவர் புலவர் பொன்முடி சுப்பையன், விஜய் சண்முகம், புலவர் குப்புராசு, பேராசிரியர் ஐ.கே. சுப்பிரமணியம், பாவலர் சிவபாஸ்கரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று கருத்துரை வழங்குகின்றனர்.
இடம்: பொறியாளர் இல்லம்: மருத்துவமனை எதிரில்.: தேதி: 20: உலக இசை தினம் உலக இசை தினத்தை முன்னிட்டு கர்நாடக இசை நிகழ்ச்சி மற்றும் கூட்டிசை நிகழ்ச்சி நடக்கிறது. பஜன், அபங்க் மற்றும் இந்திய பாரம்பரிய இசை பிடித்தவர்கள் பங்கேற்று பாடலாம். அனுமதி கட்டணம் உண்டு
இடம்: அந்தரா - கலை மற்றும் கலாச்சார ஸ்டுடியோ: தேதி: 21 நேரம் மாலை: வாங்க சிரிக்கலாம் கோவை நகைச்சுவை சங்கம் 5 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு 30 வது நிகழ்ச்சியாக, 'எனுங்க வாங்க சிரிக்கலாம்' என்ற நகைச்சுவை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் நடிகர் சத்யராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகிறார். வயிறு குலுங்க சிரித்து மகிழ சிறப்பான நிகழ்ச்சி, அனுமதி இலவசம்.
இடம்: பிருந்தாவன் ஆடிட்டோரியம்: தேதி: 21 நேரம் மாலை 6:00 மணி: யோகா தினம் நல்லிணக்கம், ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்கான சிறந்த முறையாக யோகா பயிற்சி உள்ளது. 12 வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கோவை நிர்மயா யோகா மற்றும் கோழிக்கோடு டீம் யோகா சார்பில், பயிற்சி பெற்ற யோகா பயிற்சியாளரால் சிறப்பு யோகா பயிற்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இடம்: ஸ்ரீகணாபதி மஹால்: தேதி: 21: வேலை வாய்ப்பு கோவை வேளாண் பல்லையில் வேலைவாய்ப்பு கண்காட்சி இரண்டு நாட்கள் நடக்கிறது. 2000 வேலை வாய்ப்புகள் உள்ளன. முன்னணி நிறுவனங்கள் தங்களுக்கான பணியாளர்களை தேர்வு செய்கின்றனர். மாணவர்கள் முன்னணி நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு தங்களின் வேலை வாய்ப்பை பெற இது ஒரு சிறந்த வாய்ப்பு.
இடம்: வேளாண் பல்கலை கோவை.: தேதி: 23:
