/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டுக்குள் புகுந்து விடுகிறது யு.ஜி.டி. கழிவு நீர்
/
வீட்டுக்குள் புகுந்து விடுகிறது யு.ஜி.டி. கழிவு நீர்
வீட்டுக்குள் புகுந்து விடுகிறது யு.ஜி.டி. கழிவு நீர்
வீட்டுக்குள் புகுந்து விடுகிறது யு.ஜி.டி. கழிவு நீர்
ADDED : செப் 14, 2025 11:37 PM

மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட, 79வது வார்டு பேரூர் மெயின் ரோடு, செல்வபுரம் அருகே கல்லாமேடு, முத்துச்சாமி காலனி, எஸ்.ஏ.கார்டன், தில்லை நகர், லால் பகதுார் சாஸ்திரி ரோடு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது. இந்த வார்டில், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் பிரதான பிரச்னையாக இருப்பது, சேத்துமா வாய்க்கால். இதன் தண்ணீர் சிறிய மழை பெய்தாலே வீடுகளுக்குள் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. நான்கு ஆண்டுகளாக இதனால் உயிர் பயத்துடன் தவிப்பதாக, அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர்.
கல்லாமேடு பகுதியில் இருக்கும் ரேஷன் கடையில் பொருட்கள்சரியாக கிடைப்பதில்லை. கண் முன்னே லாரியில் பொருட்கள் கடைக்கு செல்கின்றன. ஆனால், 'சில பொருட்கள் வரவில்லை; போய் வாருங்கள்' என்கின்றனர். முன்பு வீதிகளின் பெயர் குறித்த அறிவிப்பு பலகை நிறுவப்பட்டிருந்தது. அவற்றை மீண்டும் நிறுவ வேண்டும். -முரளி லோடிங் ஒர்க்
சரோஜினிநகர் பகுதியில் அமைக்கப்பட்ட சாக்கடை கால்வாய்களில், வாட்டம் இல்லாததால் சேத்துமா வாய்க்காலுக்கு தண்ணீர் செல்ல முடிவதில்லை. ஆங்காங்கே சாக்கடை மேல் பகுதியில், 'ரேம்ப்' அமைத்து உள்ளதால், அடைப்பை சரி செய்யவும் முடிவதில்லை. துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. மழை சமயத்தில் மோட்டார் வாயிலாக, வீடுகளுக்குள் செல்லும் தண்ணீரை வெளியேற்றுகிறோம். -செந்தில்குமார் சுயதொழில்
கல்லாமேடு, தென் வடல் வீதியில் சுற்றுப்பகுதி குப்பையை வந்து கொட்டி, துாய்மை பணியாளர்கள் தரம் பிரிக்கின்றனர். துர்நாற்றம் தாங்க முடிவதில்லை. இங்குள்ள சாக்கடையும் அடைபட்டு பல மாதங்களாகிறது. சுடுகாடு செல்லும் வழியும் மோசமாக இருப்பதால் சிரமமாக உள்ளது. சுகாதார பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். -லட்சுமி மளிகை வியாபாரி
'ரிவர்ஸ்' எடுக்கிறது! சரோஜினி நகர் இரண்டாம் வீதியில் தெரு விளக்கு விட்டு விட்டு எரிகிறது. வாய்க்காலில் பிளாஸ்டிக், குப்பை கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. பாதாள சாக்கடை நிரம்பினால், 'மேன் ஹோல்' பகுதியில் இருந்து சாக்கடை கால்வாயில் கழிவுநீர் வெளியேறும் வகையில், குழாய் அமைத்துள்ளனர். மழை காலங்களில் தண்ணீர் 'ரிவர்ஸ்' எடுக்கும் பட்சத்தில், யு.ஜி.டி., தொட்டி நிரம்பி வீடுகளுக்குள் கழிவுநீர் புகுகிறது. -சக்திவேல் சுயதொழில்