/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : செப் 19, 2025 10:24 PM
பக்தி பாடல்கள் கோவையில் செயல்படும் முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் அறக்கட்டளை சார்பில், மாதாந்திர பக்தி பாடல் நிகழ்ச்சி, ஆர்.எஸ்.புரம் பாஷ்யகாரலு ரோட்டில் உள்ள மாருதி கான சபாவில், இன்று மாலை 5.15 மணிக்கு நடக்கிறது. அனுமதி இலவசம்.
கந்தர் அனுபூதி கோவை, மலுமிச்சம்பட்டியில் செயல்படும் ஆத்ம வித்யாலயம் அத்வைத வேதாந்த குருகுலத்தில், கந்தர் அனுபூதி என்ற தலைப்பில், இன்று சொற்பொழிவு நடக்கிறது. மாலை 5.30 முதல் இரவு 7 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில், சுவாமி சங்கரானந்தா சொற்பொழிவாற்றுகிறார்.
கோடி நாம அர்ச்சனை சத்ய சாய் சேவா நிறுவனங்கள் கோவை மாவட்டம் சார்பில், சத்ய சாய் கோடி நாம அர்ச்சனை, கோவை ரேஸ்கோர்ஸ், வெஸ்ட் கிளப் ரோட்டில் உள்ள சத்ய சாய் மந்திரில் நடந்து வருகிறது. இன்று காலை 7 முதல் 9 மணி வரை பாராயணம், மாலை 5.30 முதல் 6.30 மணி வரை சாய் பஜன், சத்சங்கம் நடக்கிறது.
பேஷன் கண்காட்சி கோவையில் பேஷன் அண்டு லைப் ஸ்டைல் கண்காட்சி, தாஜ் விவாந்தா ஓட்டலில் இன்று காலை 11 முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. லைம்சோடா நிறுவனம் நடத்தும் இக்கண்காட்சியை காண அனுமதி இலவசம்.
ஸ்ருஷ்டி 2025 தமிழ்நாடு கிராப்ட் கவுன்சில் சார்பி ல், ஸ்ருஷ்டி டெக்ஸ்டைல்ஸ், ஜூவல் லரி, அசசரீஸ், வீட்டு அலங்கார பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை, பீளமேட்டில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் நடக்கிறது. காலை 10.30 முதல் இரவு 8 மணி வ ரை கண்காட்சி நடக்கிறது.
ஆதார் முகாம் தபால்துறை மற்றும் லிஸ்டாஸ் ப்ரீ ஸ்கூல் சார்பில், 1 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆதார் முகாம், பீளமேடு நேரு நகர் மேற்கு, டிஎன்எச்பி காலனியில் இன்று காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.
குடி நோய் விழிப்புணர்வு குடிப்பழக்கத்தில் விடுபட நினைப்போருக்காக, ஆல்கஹாலிக் அனானிமஸ் அமைப்பு சார்பில், குடிநோய் விழிப்புணர்வு கூட்டம் நகரில் பல்வேறு இடங்களில் நடத்தப்படுகிறது. இக்கூட்டம் இன்று, போத்தனுார் புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைபுதுாரில் உள்ள ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில், இரவு 7 முதல் 8.30 மணி வரை நடக்கிறது.
சாதனையாளர்களின் சிறப்புரை சி.ஐ.ஐ. யங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில், விண்வெளி, ஏ.ஐ. தொழில்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த சாதனையாளர்கள் பங்கேற்கும், 'எக்ஸ் பேக்டர்' என்ற நிகழ்ச்சி, அவிநாசி ரோடு, கோல்டுவின்ஸில் உள்ள மெர்லிஸ் ஓட்டலில், இன்று 10 மணிக்கு நடக்கிறது. இந்திய விண்வெளி வீரர் நாயர், டைட்டன் நிறுவன முன்னாள் நிர்வாக இயக்குனர் பக்ஸ்கர் பாட்ட் உள்ளிட்ட சாதனையாளர்கள் சிறப்புரையாற்றுகின்றனர்.
சங்க மாநாடு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கத்தின் 8வது மாநில மாநாடு, திருச்சி ரோடு, எல் அண்டு டி பை-பாஸ் ரோட்டில் உள்ள ஏகேஏ மற்றும் விஜயலட்சுமி திருமண மண்டபத்தில், இன்று காலை 9 மணிக்கு நடக்கிறது. சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர்.
'இட்லி கடை' ட்ரைலர் சத்தி ரோடு, சரவணம்பட்டியில் உள்ள புரோசோன் மாலில், இட்லி கடை திரைப்பட ட்ரைலர் மற்றும் அறிமுக நிகழ்ச்சி இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. இதில், நடிகர் தனுஷ், நடிகை நித்யா மேனன் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
ஆன்மிகம் புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு அலங்கார பூஜை, பஜனை:
l அரங்கநாதர் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, காரமடை. காலை 5.30 மணி முதல்.
l வெங்கடேசபெருமாள் கோவில், சேவூர் ரோடு, மொண்டிபாளையம். மகா அபிஷேகம் - அதிகாலை 5 மணி. பஜனை பாடல் - காலை 10 மணி. சுவாமி வீதியுலா - இரவு 7.30 மணி.
l கரிவரதராஜ பெருமாள் கோவில், அன்னுார். காலை 5 மணி.
l ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், பாப்பநாயக்கன்பாளையம். காலை, 7 மணி. கருட சேவை - மாலை 5 முதல் 6 மணி வரை.
l ருக்மணி பாண்டுரங்க சுவாமி கோவில், பேரூர் ரோடு, செல்வபுரம், சரோஜினி நகர் முதல் வீதி. காலை 7 மணி.
l வரசித்தி விநாயகர், வரதராஜ பெருமாள், மகாலட்சுமி சுவாமி கோவில், அம்பாள் நகர், சேரன் மாநகர். காலை 6 மணி.
l லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி கோவில், பெரிய கடை வீதி. காலை 6 மணி.
l கோதண்டராமர் கோவில், ராம் நகர். காலை 7 மணி.
l கோபாலகிருஷ்ணர் சன்னதி, மாரியம்மன் கோவில் வளாகம், மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையம். காலை 7 மணி.
l லட்சுமி நரசிம்மர் கோவில், உக்கடம். காலை 7 மணி.
l வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவில், சலீவன் வீதி. காலை 9 மணி.
l கோபால கிருஷ்ணர் கோவில், சித்தாபுதுார். காலை 7 மணி.
l கிருஷ்ணர் கோவில், குனியமுத்துார் இடையர்பாளையம். காலை 7 மணி.
l கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில், பொள்ளாச்சி ரோடு, குறிச்சி. காலை, 7 மணி.
l கிருஷ்ணர் பஜனை கோவில், மாணிக்க சேர்வை வீதி, குறிச்சி. காலை 9 மணி. பஜனை பாடல் - இரவு 7 மணி.
l கரிவரதராஜப் பெருமாள் கோவில், வெள்ளலுார். அபிஷேகம் - காலை 7 மணி. அலங்காரம் - காலை 8 மணி.
l அனுமந்தராய சுவாமி கோவில், இடுகம்பாளையம், சிறுமுகை ரோடு, மேட்டுப்பாளையம். காலை 9 மணி. அன்னதானம் - மதியம் 12 மணி. ஆஞ்சநேயரின் பக்தி சொற்பொழிவு - மதியம் 12.45 மணி. பள்ளி குழந்தைகளின் நடன நிகழ்ச்சி - மதியம் 1.30 மணி. கலை நிகழ்ச்சி - மதியம் 2.30 மணி. உற்சவர் புறப்பாடு - மாலை 5 மணி.
l ராமானுஜர் கோவில், சின்னதொட்டிபாளையம், பெள்ளாதி, காரமடை. காலை 6 மணி. பஜனை பாடல் - காலை 9 மணி. சுவாமி புறப்பாடு, அன்னதானம் - மதியம் 12 மணி.