ADDED : ஜூன் 08, 2026 05:53 AM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: காரமடை அருகே உள்ள குட்டையூரில் தனியார் நிறுவனத்தில் பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வந்தவர் வினோத், 44. நேற்று முன்தினம் இரவு,10:00 மணிக்கு கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் பெட்டதாபுரம் பாரத் பெட்ரோல் பங்க் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, தடுமாறி விழுந்தார். பலத்த காயமடைந்த வினோத், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இறந்தார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
