/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருட்டு பைக்குகள் பதிவு எண் மாற்றம்; சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு
/
திருட்டு பைக்குகள் பதிவு எண் மாற்றம்; சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு
திருட்டு பைக்குகள் பதிவு எண் மாற்றம்; சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு
திருட்டு பைக்குகள் பதிவு எண் மாற்றம்; சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு
ADDED : செப் 15, 2025 11:08 PM

கோவை: கோவையில், திருடப்படும் பைக்குகளின் பதிவு எண்ணை மாற்றி, குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதாக வந்த தகவலை தொடர்ந்து, சோதனையை தீவிரப்படுத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை நகர்ப்பகுதியில் செயின் பறிப்பு, நகை கொள்ளை, மொபைல்போன் பறிப்பு, போதைப்பொருட்கள் விற்பனை உள்ளிட்ட, குற்றங்கள் புரிய பைக்குகள் அதிகளவில் திருடப்படுகின்றன.
பைக் பதிவு எண்ணை மாற்றி, புதிய நம்பர் பிளேட்டை பொருத்தி விடுகின்றனர். இதன் காரணமாக, திருடப்பட்ட பைக்குகளை கண்டறிவது கடினமாகிறது. சில குற்றவாளிகள், திருடிய பைக்குகளின் பாகங்களை கழட்டி, வேறு பைக்குகளின் பாகங்களுடன் பொருத்தி, புதிய பைக்குகளை உருவாக்கி விடுகின்றனர். இதை தடுக்க, வாகனத் தணிக்கையின்போது, பைக்குகளின் பதிவு எண்ணை கொண்டு, அசல் பைக்கை கண்டறிய திட்டமிட்டுள்ளனர்.
போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வாகன தணிக்கையின்போது, வாகனங்களின் பதிவு விபரங்களை பிரதானமாக சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகன பதிவு எண்ணை, அதற்கான செயலியால் சோதிக்கும்போது, பைக் தயாரிப்பு நிறுவனம், மாடல், நிறம் உள்ளிட்ட விவரம் தெரிய வரும். அதன் மூலம், பதிவு எண் மாற்றப்பட்ட பைக்குகளை எளிதில் கண்டறியலாம். வாகனத்தின் நிறம், இன்ஜின், சேஸ் எண் உள்ளிட்டவை வாயிலாக, திருட்டு வாகனத்தை எளிதில் கண்டறியலாம். இவ்வாறு, அவர் கூறினார்.