/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தில் ரூ.3.43 லட்சம் மீட்பு

/

ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தில் ரூ.3.43 லட்சம் மீட்பு

ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தில் ரூ.3.43 லட்சம் மீட்பு

ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தில் ரூ.3.43 லட்சம் மீட்பு

ADDED : ஜூன் 19, 2025 05:52 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 05:52 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவையை சேர்ந்தவர் ரவிக்குமார்; இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் ஆன்லைன் வாயிலாக முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்றுத்தருவதாக, ஆசை வார்த்தை காட்டினர்.

இதை நம்பி, ரவிக்குமார் ரூ. 45.99 லட்சம் பணத்தை முதலீடு செய்தார். ஆனால், அவருக்கு லாபம் எதுவும் கிடைக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரவிக்குமார், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ரவிக்குமார் பணம் அனுப்பிய வங்கிக்கணக்குகளை பெற்று ஆய்வு செய்தனர். அதில் மோசடிக்காக பயன்படுத்தப்பட்ட கணக்குகள் முடக்கப்பட்டன. முடக்கப்பட்ட வங்கி கணக்குகளில் இருந்து, முதற்கட்டமாக ரூ. 3.43 லட்சம் பணத்தை மீட்டு நீதிமன்றம் வாயிலாக, ரவிக்குமாரிடம் ஒப்படைத்தனர்.