/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மகளிர் சுயஉதவி குழு துவங்குவதாக உறவினரிடம் ரூ.1.64 கோடி மோசடி; உறவினர் பெண்ணை கைது செய்த போலீசார்

/

மகளிர் சுயஉதவி குழு துவங்குவதாக உறவினரிடம் ரூ.1.64 கோடி மோசடி; உறவினர் பெண்ணை கைது செய்த போலீசார்

மகளிர் சுயஉதவி குழு துவங்குவதாக உறவினரிடம் ரூ.1.64 கோடி மோசடி; உறவினர் பெண்ணை கைது செய்த போலீசார்

மகளிர் சுயஉதவி குழு துவங்குவதாக உறவினரிடம் ரூ.1.64 கோடி மோசடி; உறவினர் பெண்ணை கைது செய்த போலீசார்


ADDED : ஜூன் 05, 2025 01:20 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 01:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; மகளிர் சுய உதவி குழு துவங்குவதாக கூறி உறவினரிடம் ரூ. 1.64 கோடி மோசடி செய்த பெண்ணை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி, ஊஞ்சவேலம்பட்டியை சேர்ந்தவர் புவியரசு, 36; சுயமாக தொழில் செய்து வருகிறார். இவரது உறவினர் பொள்ளாச்சி, வள்ளியம்மாள் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் ரம்யா, 37.

இவர், புவியரசை சந்தித்து, தான் மகளிர் சுய உதவி குழு ஆரம்பிக்க இருப்பதாக கூறினார். அதில், முதலீடு செய்தால், வார கடன் கொடுத்தால், அதிக லாபம் கிடைக்கும் என கூறினார்.

இதை நம்பிய புவியரசு, 2023ம் ஆண்டு மார்ச் மாதம், ரூ. 4.90 லட்சம் முதலீடு செய்தார். இதையடுத்து, குழு ஆரம்பிக்கப்பட்டதாக கூறிய ரம்யா, கடன் பெற்றவர்கள் விவரங்கள் அடங்கிய பத்திரத்தை, புவியரசிடம் கொடுத்துள்ளார்.

இதன் பின்னர், முதல் வார வசூல் பணத்தை, புவியரசின் வங்கி கணக்குக்கு அனுப்பினார். இதில், வரும் லாப பணத்தை, மீண்டும் முதலீடு செய்யுமாறு ரம்யா கேட்டுக்கொண்டதின் பேரில், புவியரசு 2023ம் ஆண்டு மார்ச் முதல் டிச., வரை ரூ. 1.64 கோடி பணத்தை, பல்வேறு தவணைகளில் ரம்யாவிடம் கொடுத்துள்ளார்.

அதன் பின், வசூல் பணத்தை புவியரசு வங்கி கணக்குக்கு, ரம்யா அனுப்பாமல் இருந்ததையடுத்து, அவர் நேரில் சென்று கேட்டார்.

பல்வேறு காரணங்கள் கூறி, காலம் கடத்தி வந்தார். இதையடுத்து, கடன் பத்திரத்தில் இருந்த விவரங்களை வைத்து, கடன் வாங்கிய நபர்களிடம் நேரில் சென்று கேட்ட போது, அவர்கள் அப்படி எந்த குழுவிலும் சேரவில்லை; யாரிடமும் பணம் பெறவில்லை எனக்கூறியுள்ளனர்.

அப்போது தான், புவியரசுக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. அவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரம்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.