/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வங்கிக்கணக்கை 'வாடகைக்கு' விட்ட கபடி வீரருக்கு 'கிடுக்கிப்பிடி'

/

வங்கிக்கணக்கை 'வாடகைக்கு' விட்ட கபடி வீரருக்கு 'கிடுக்கிப்பிடி'

வங்கிக்கணக்கை 'வாடகைக்கு' விட்ட கபடி வீரருக்கு 'கிடுக்கிப்பிடி'

வங்கிக்கணக்கை 'வாடகைக்கு' விட்ட கபடி வீரருக்கு 'கிடுக்கிப்பிடி'


ADDED : ஜூன் 05, 2025 01:29 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 01:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவைப்புதுாரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் ஆன்லைன் மோசடியில் ரூ.15 லட்சத்தை இழந்ததாக கூறி, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது, ஆன்லைன் வாயிலாக முதலீடு செய்தால் அதிக லாபம் கொடுப்பதாக கூறியதை நம்பி, மோசடி நபர்கள் அளித்த வங்கி கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளில் ரூ.15 லட்சம் வரை அனுப்பியுள்ளார். ஆனால் அவரது முதலீடு மற்றும் லாப பணத்தை கொடுக்காமல், மோசடி நபர்கள் ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.

பணத்தை இழந்த நபர் பணம் அனுப்பிய கணக்குகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஒரு கணக்கு, கோவை, புலியகுளம் பகுதியை சேர்ந்த கபடி வீரர் அஷ்வின், 24 என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. கோவை சைபர் கிரைம் போலீசார் அஷ்வினை கைது செய்தனர்.

விசாரணையில், அஷ்வின் கபடி விளையாட சென்ற இடத்தில், பழக்கமான நபர் ஒருவர் வங்கி கணக்கு துவங்கி, மோசடி நபர்களுக்கு கொடுத்தால் கமிஷன் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். அஷ்வின் தனது வங்கி கணக்கை ஆன்லைன் மோசடி நபர்களுக்கு கொடுத்தார். அதில் வரும் பணத்திற்கு ஒரு பங்கு கமிஷனாக பெற்றுக்கொண்டு, மீதப்பணத்தை மோசடி நபர்கள் கூறும் வங்கி கணக்குகளுக்கு அனுப்புவதை வாடிக்கையாக கொண்டிருந்தது தெரியவந்தது.

அஷ்வினை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.