sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சிறுவாணி அணை நீர் மட்டம்... சரிகிறது! பயன்பாட்டில் தேவை சிக்கனம்

சிறுவாணி அணை நீர் மட்டம்... சரிகிறது! பயன்பாட்டில் தேவை சிக்கனம்

சிறுவாணி அணை நீர் மட்டம்... சரிகிறது! பயன்பாட்டில் தேவை சிக்கனம்


UPDATED : மே 10, 2026 07:16 PM

ADDED : மே 10, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2026 07:16 PM ADDED : மே 10, 2026 07:12 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: சிறுவாணி அணை நீர்மட்டம் 10 அடியாக சரிந்துள்ள நிலையில், நீரை சிக்கனமாக பயன்படுத்த மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணை தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. கடந்த ஏப்., முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

மழை இல்லாததாலும், குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுக்கப்படுவதாலும் அணையின் நீர் மட்டம் இம்மாத துவக்கத்தில் 12 அடிக்கும் குறைவாகவே இருந்தது.

அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 50 அடி. கடந்த 3ம் தேதி அணையின் நீர் மட்டம் 11.91 அடியாக இருந்தது. வெயிலின் தாக்கத்தால் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

இதனால், கடந்த ஒரு வாரமாக அணையின் நீர் மட்டம் 10 முதல் 12 அடியாக இருந்து வருகிறது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி அடிவாரத்தில் 13 மி.மீ., மற்றும் அணைப்பகுதியில் 14 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.

நீர் மட்டமானது 10.79 அடியாக இருக்க, குடிநீர் தேவைக்காக 4.2 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது. தண்ணீர் இருப்பு சரிந்து வரும் நிலையில் பருவ மழையையே நம்பியிருக்க வேண்டியுள்ளது.

தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூனில் துவங்கும். அதுவரை பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

பில்லுார் அணை கை கொடுத்தாலும், குடிநீர் தேவை தவிர இதர தேவைகளுக்கு நல்ல தண்ணீர் பயன்படுத்துவதை தவிர்க்க, மாநகராட்சி நிர்வாகம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

'தற்போது இருக்கும் தண்ணீரை வைத்து ஜூன் இரண்டாம் வாரம் வரை சமாளிக்க முடியும். ஜூன் முதல் வாரத்தில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை பொது மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்' என்கின்றனர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us