தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காட்டுயானைகளின் பாச்சா... பலிக்காது! பேட்டரி மின்வேலி வந்தாச்சு

காட்டுயானைகளின் பாச்சா... பலிக்காது! பேட்டரி மின்வேலி வந்தாச்சு

காட்டுயானைகளின் பாச்சா... பலிக்காது! பேட்டரி மின்வேலி வந்தாச்சு

1


UPDATED : ஜூன் 14, 2026 03:14 AM

ADDED : ஜூன் 13, 2026 07:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2026 03:14 AM ADDED : ஜூன் 13, 2026 07:10 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொண்டாமுத்தூர்: கோவை வனச்சரகத்தில், காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவதை தடுக்க பேட்டரியால் இயங்கும் மின் வேலி அமைக்கப்படுகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி, விளைநிலங்களுக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று, முதற்கட்டமாக, கோவை வனச்சரகத்தில், அட்டுக்கல் முதல் பொம்மணம்பாளையம் வரையுள்ள 5 கி.மீ., தொலைவிற்கும், குப்பேபாளையம் முதல் தேவராயபுரம் வரையுள்ள 5 கி.மீ., தொலைவிற்கும், வனத்துறை சார்பில் 5 கோடி ரூபாய் மதிப்பில், உருக்கு கம்பிவேலி அமைக்கப்பட்டது. இதற்கு நல்ல பலன் கிடைத்தது.

Image 1587730


இந்த 10 கி.மீ., பகுதியில், காட்டு யானைகள் வெளியேறுவது குறைந்தது. இருப்பினும், கூட்டமாக வரும் யானைகள் உருக்கு கம்பி வேலி இரும்பு தூண்களில் மோதுவதால், இரும்புத்தூண் வளைந்து விடுகிறது. ஆகவே திட்டத்தை மேலும் பலப்படுத்தும் வகையில், இந்த உருக்கு கம்பியில், பேட்டரியால் இயங்கும் மின் வேலி அமைக்கப்படுகிறது.

வனத்துறையினர் கூறுகையில், 'யானைகள் இரும்புத்தூண்களை வளைத்து விடுகின்றன. ஆகவே பேட்டரியால் இயங்கும் மின்வேலி அமைக்கப்படுகிறது. இது யானைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் தடுக்க உதவும். சோதனை முறையில் கோவை வனச்சரகத்தில், 5 கி.மீ., தொலைவுள்ள உருக்கு கம்பி வேலியில், பேட்டரி மின் வேலி அமைக்கப்பட்டு வருகிறது' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us