/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சம்பளம் வழங்க ஊழியர்கள் கோரிக்கை
/
சம்பளம் வழங்க ஊழியர்கள் கோரிக்கை
ADDED : செப் 14, 2025 01:57 AM

கோவை:கோவை அரசு மருத்துவமனையில், 'கிறிஸ்டல்' என்கிற தனியார் நிறுவனம் ஒப்பந்த முறையில் துாய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் என, 510 பேரை பணிக்கு நியமித்துள்ளது. இவர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்குவதில்லை. சம்பளத்தை குறைத்து வழங்குவதாக கூறி, ஒப்பந்த ஊழியர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
ஒப்பந்த பணியாளர்கள் கூறு கையில், 'இரு மாதங்களாக, 2,000 முதல் 6,000 ரூபாய் வரை சம்பளத்தை குறைத்துக் கொடுக்கின்றனர். 6-7ம் தேதிகளில் ஊதியம் வழங்க வேண்டும். தற்போது வரை வழங்கவில்லை.
ஒவ்வொரு மாதமும் தாமதமாகவே விடுவிக்கின்றனர். இன்று (நேற்று) போராட்டத்தில் ஈடுபட்டபோது, ஊதியம் உடனடியாக விடுவிக்கப்படும் என மேலாளர் தெரிவித்ததால், கலைந்து சென்றோம். எங்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்' என்றனர்.