UPDATED : ஜூன் 20, 2026 11:42 PM
ADDED : ஜூன் 20, 2026 10:43 PM
அ நிறம் | அளவு
கோவை: சேலத்தை சேர்ந்தவர் மணி, 50; கட்டட மேஸ்திரி. சாய்பாபாகாலனியில் இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்தார். தினமும் தொழிலாளர்களை கட்டுமான பணிக்கு அழைத்துச் செல்வார். ஜூன்19 கோவில்மேட்டை சேர்ந்த ரவீந்திரன், 40 என்பவரை கட்டடப் பணிக்கு அழைத்துச் சென்றார்.
மாலை பணி முடிந்ததும் கூலி வழங்கிய போது, மணியின் மனைவியிடம், ரவீந்திரன் தவறாக நடந்து கொண்டுள்ளார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அன்று இரவு வெளியில் சென்று வீடு திரும்பிய மணி, வீட்டில் ரவீந்திரன் இருப்பதை கண்டு ஆத்திரமடைந்தார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மணி, கட்டையால் தாக்கியதில் ரவிந்திரன் பலியானார். சாய்பாபா காலனி போலீசார் மணியை கைது செய்தனர்.
