ADDED : ஏப் 21, 2026 07:07 PM

அன்னூர்: அன்னூர் தாலுகாவில் ஓட்டு சாவடிகளில் கேமராக்கள் சரிபார்க்கப்பட்டன.
அவிநாசி தொகுதிக்குட்பட்ட, அன்னூர் ஒன்றியத்தில், ஓட்டு சாவடிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அனைத்து ஓட்டு சாவடிகளிலும் ஓட்டு சாவடியின் உள்புறம் மற்றும் முன்புறம் என இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இத்துடன் ஓட்டுச் சாவடியில் இருந்து 100 மீ., தொலைவுக்கான எல்லையை குறிக்கும் கோடு பெயின்டிங்கில் வரையப்பட்டது. 200 மீ., எல்லையை குறிக்கும் கோடும் வரையப்பட்டது. அன்னூர் அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொருத்தப்பட்ட கேமராக்கள் சரிபார்க்கப்பட்டன.
இதுகுறித்து வருவாய் துறையினர் கூறுகையில், 'அனைத்து ஓட்டு சாவடிகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு விட்டன. 100 மீ., 200 மீ., அடையாளக் குறியீடுகள் இடப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுச் சாவடிகள் தயார் நிலையில் உள்ளன,' என்றனர்.
ஓட்டு சாவடிகளின் ஆய்வில், வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் குமரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
