ADDED : ஜூன் 11, 2026 06:45 AM
அ நிறம் | அளவு
போத்தனூர்: சுந்தராபுரத்திலிருந்து இடையர்பாளையம் செல்லும் சாலையில், தபால் அலுவலகம் அடுத்து டிரான்ஸ்பார்மர் உள்ளது. நேற்று மாலை அங்குள்ள ஒரு வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, நான்கு பேர் ஒரு காரில் வந்துள்ளனர். மாலையில் நால்வரும் புறப்பட்டனர். கார் டிரான்ஸ்பார்மர் மீது மோதியது. டிரான்ஸ் பார்மர் பழுதானது.
மின் வினியோகம் தடைபட்டது. மின் வாரியத்தினர் சீரமைத்தனர். ஆறு மணி நேரத்திற்கு பின் பெரும்பாலான பகுதிகளில் மின் வினியோகம் தரப்பட்டது. ஆனால், போயர் வீதிக்கு மின் வினியோகம் சீராகாததால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
