/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
1,010 இ - மெயில் ஐ.டி. வாயிலாக கோவைக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்கிறது
/
1,010 இ - மெயில் ஐ.டி. வாயிலாக கோவைக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்கிறது
1,010 இ - மெயில் ஐ.டி. வாயிலாக கோவைக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்கிறது
1,010 இ - மெயில் ஐ.டி. வாயிலாக கோவைக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்கிறது
ADDED : செப் 29, 2025 12:49 AM

கோவை; வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வரும் நிலையில், 1,010 இ-மெயில் ஐ.டி.க்களை போலீசார் கண்டுபிடித்து, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சமீபகாலமாக விமான நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆக., 20ம் தேதி கோவை விமான நிலையம் உட்பட நாடு முழுவதும் உள்ள, 100 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதற்கு முன் கோவையில் உள்ள சில தனியார் பள்ளிகளுக்கு, அடுத்தடுத்த நாட்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு, கடந்த 26ம் தேதி மற்றும் அவிநாசி ரோடு தண்டுமாரியம்மன் கோவில் எதிரில் உள்ள, மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு, 27ம் தேதி இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. 28ம் தேதியும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
அதே தினம் பிற்பகல், கோவை மாவட்ட நீதிமன்றத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. நேற்று கோவை விமான நிலையம் உட்பட நாட்டின் பல்வேறு பள்ளிகள், விமானநிலையங்களுக்கு, குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மிரட்டல் வரும் ஒவ்வொரு முறையும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், போலீசார் விரைந்து சென்று அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்துகின்றனர்.
இதுவரை, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட, 1000 இ-மெயில் ஐ.டி.க்களை கண்டுபிடித்துள்ள சைபர் கிரைம் போலீசார், பின்னணியில் உள்ள நபர்களை கண்டறிய, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போலீசார் கூறியதாவது:
இதுபோன்ற போலி வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்கள் நடப்பாண்டு, 24 முறை வந்துள்ளன. கடந்தாண்டு, இது, 23 ஆக இருந்தது. இத்தகைய மிரட்டல் பேர்வழிகள், 'டார்க்-வெப்' வாயிலாக இ-மெயில்களை அனுப்புகின்றனர். அதில் அவர்களின் அடையாளங்கள் தெரியாது. இருப்பினும் தொடர்ந்து கண்காணிக்கிறோம். இதுவரை, 1,010 இ-மெயில் ஐ.டி.க் களில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.