/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு 3ம் முறையாக வெடிகுண்டு மிரட்டல்
/
கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு 3ம் முறையாக வெடிகுண்டு மிரட்டல்
கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு 3ம் முறையாக வெடிகுண்டு மிரட்டல்
கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு 3ம் முறையாக வெடிகுண்டு மிரட்டல்
ADDED : செப் 02, 2025 08:51 PM

கோவை; கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மூன்றாவது முறையாக, நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இ-மெயில் அனுப்பியவரை கண்டறிய முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.
ஆக. 20ல் கோவை விமான நிலையம், 26ல் கோவை கலெக்டர் அலுவலகம், 27ல் தண்டுமாரியம்மன் கோவில் எதிரே உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், 28ல் கலெக்டர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன், அப்பகுதிகளில் நடத்திய சோதனையில், புரளி எனத் தெரிந்தது.
மூன்றாம் முறையாக, கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் நேற்று காலை 10.45 மணிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தீவிர சோதனை நடத்தப்பட்டது; எதுவும் சிக்கவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் வழியாக வருகிறது. இ-மெயில் அனுப்பிய ஐ.பி. அட்ரசை கண்டறிந்து, போலீசார் தேடும்போது, குறிப்பிட்ட இடத்தை காட்டாமல், தொடர்ந்து மாறிக் கொண்டே உள்ளது.
சில செயலிகளை பதிவிறக்கம் செய்து அதன் வாயிலாக இ-மெயில்கள் அனுப்பப்படுகின்றன. இதன் காரணமாக, மிரட்டல் விடுக்கும் நபர்களை கண்டறிய முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.
மாநகர போலீஸ் உயர் அலுவலர் கூறுகையில், 'இதுபோன்று மிரட்டல் விடுப்பவர்கள், 'டார்க் வெப்' பயன்படுத்துகின்றனர். அதனால், இருப்பிடத்தை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மிரட்டல் விடுக்கப்பட்ட இ-மெயில் முகவரிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மிரட்டல் விடுக்கும் நபர் இ-மெயிலின் 'சப்ஜெக்ட்' பகுதியில் வெடிகுண்டு பற்றிய தகவலை பகிர்ந்துள்ளார். சர்ச்சைக்குரியகருத்துக்களும் இருப்பதால், அதன் அடிப்படையிலும்விசாரணை நடக்கிறது. விசாரணைக்கு நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன' என்றார்.