தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'அடிப்படை பரிசோதனை... முதுமையில் கட்டாயம் தேவை'

 'அடிப்படை பரிசோதனை... முதுமையில் கட்டாயம் தேவை'

 'அடிப்படை பரிசோதனை... முதுமையில் கட்டாயம் தேவை'


ADDED : பிப் 08, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 05:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'எ னக்கெல்லாம் ஒன்னும் வராது, திடமாகத்தான் இருக்கேன்' என்ற நம்பிக்கையில் பலர் அடிப்படை பரிசோதனைகளை செய்ய தவறிவிடுகின்றனர்.

பலரின் திடீர் இறப்புகளுக்கு இதுவே முக்கிய காரணமாக அமைந்துவிடுவதாக, மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுகுறித்து, அரசு மருத்துவமனை முதியோர் நலப்பிரிவு டாக்டர் பாரதி நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது...

முதுமையில் அபாய கட்டத்தில் சிகிச்சைக்கு வரும் பலர் சர்க்கரை, கொழுப்பு, ரத்த அழுத்தம் சார்ந்த பரிசோதனையை வாழ்நாளில் செய்துகொண்டதே இல்லை என்பதை காண்கிறோம்.

பரிசோதனை செய்யாமலேயே ஒன்றும் இல்லை என முடிவு செய்துவிடக்கூடாது. எந்த ஒரு வியாதியும், பாதிப்பும் உடலில் திடீரென்று வருவதில்லை. 30-40 வயதுக்கு மேல் நல்ல ஆரோக்கியமாகவே இருந்தாலும் சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு உள்ளிட்ட பரிசோதனைகளை கட்டாயம் செய்துகொள்ள வேண்டும்.

பரம்பரையில் இப்பாதிப்பு இருப்பவர்கள் பரிசோதனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறிப்பாக, 50-60 வயதை கடந்தவர்கள் அடிப்படை பரிசோதனைகள் மட்டுமின்றி, முழு உடல் பரிசோதனையும் ஆண்டுக்கு ஒரு முறை செய்துகொள்வது நல்லது. பாதிப்பு உள்ளவர்கள் அதற்கு ஏற்ப தேவையான பரிசோதனைகளை, மருத்துவர் அறிவுரையின் பேரில் அடிக்கடி செய்துகொள்ள வேண்டும்.

பெண்கள், அடிப்படை பரிசோதனைகளுடன் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சார்ந்த பரிசோதனைகளையும் செய்து கொள்வது அவசியம். நீண்ட நாட்கள் இருக்கும் கால், கை உள்ளிட்ட உடல் சார்ந்த வலிகள், கட்டிகள், திடீரென்று உடலில் ஏற்படும் மாற்றங்கள் எதையும் அலட்சியமாக விடக்கூடாது.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us