/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யுனைடெட் கலை கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு
/
யுனைடெட் கலை கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு
யுனைடெட் கலை கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு
யுனைடெட் கலை கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு
ADDED : செப் 21, 2025 06:24 AM
கோவை : யுனைடெட் கலை அறிவியல் கல்லுாரியில், செயற்கை நுண்ணறிவு குறித்த சர்வதேச கருத்தரங்கம் நடந்தது. யுனைடெட் கல்வி குழுமங்களின் நிறுவனர் சண்முகம் தலைமை வகித்தார்.
சென்னை டிமென்ஷன் நிறுவன இயக்குனர் சுரேஷ் ஸ்ரீனிவாசன், மலேசியா கர்டின் பல்கலை பேராசிரியர் சிவராமன் ஈஸ்வரன் ஆகியோர், 'தற்போதைய உலகில் செயற்கை நுண்ணறிவின் தேவை; அவை எவ்வாறு இயங்குகிறது; ஆக்கப்பூர்வமான முறையில், அதை பயன்படுத்தும் முறை; செயற்கை நுண்ணறிவு சார்ந்த அறிவை எப்படி பெறுவது; அதற்கான இணையதளங்கள் எவை' என்பது குறித்து பேசினர்.
யுனைடெட் கல்வி குழுமங்களின் இயக்குனர் சிவக்குமார், கல்லுாரி முதல்வர் விஜயா, கணினி அறிவியல் துறை தலைவர் பாலகுமார் மற்றும் பேராசிரியர்கள், சென்னை, பெங்களூருவில் உள்ள பல்கலைகள், கல்லுாரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் பங்கேற்றனர்.