/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழமையான திருவாழிக்கல் கல்வெட்டு; தாராபுரத்தில் கண்டுபிடிப்பு
/
பழமையான திருவாழிக்கல் கல்வெட்டு; தாராபுரத்தில் கண்டுபிடிப்பு
பழமையான திருவாழிக்கல் கல்வெட்டு; தாராபுரத்தில் கண்டுபிடிப்பு
பழமையான திருவாழிக்கல் கல்வெட்டு; தாராபுரத்தில் கண்டுபிடிப்பு
ADDED : செப் 29, 2025 01:04 AM

பொள்ளாச்சி; திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த தாளக்கரையில், இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் நடத்திய ஆய்வில், ஹொய்சாளர் பேரரசின் கல் வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிறுவன இயக்குனர் நாராயணமூர்த்தி கூறிய தாவது:
தாராபுரம் அடுத்த தாளக்கரை அருகே வயல்வெளிக்குள், கல்வெட்டுடன் கூடிய துாண் சாய்ந்த நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், சதுர வடிவில் கல்துாணின் நான்கு பக்கமும், மேற்புறமும் கல்வெட்டு கண்டறியப்பட்டது. அந்த கல்வெட்டு, ஹொய்சாளர் மன்னர் மூன்றாம் வீரவல்லாளனின், 35ம் ஆட்சி ஆண்டில், கி.பி.1326ல் பொறிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் கிரந்த எழுத்துக்களில் அதிக பிழைகளுடன் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது.
கல்துாணின் தென்பகுதியில் சங்கும், வட பகுதியில் சக்கரமும் பொறிக்கப்பட்டுள்ளது. திருவிடையாட்டம் என்பது வைணவக்கோயில்களுக்கு அளிக்கப்படும் நிலக்கொடை. இவ்வாறு கொடை அளிக்கப்படும் நிலங்களின் மீது உரிமைக்காகவும் அடையாளத்துக்காகவும் ஊன்றப்படும் கல் 'திருவாழிக்கல்' என்று அழைக்கப்பட்டது.
இந்தக்கொடைக்கு உரிய மாதவப் பெருமாள் கோயில், பவானி அணைப்பகுதியில் மூழ்கி சிதைந்து போய் இருக்கிறது. தற்போது டணாயக்கன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.