/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசுப்பள்ளியில் 3 மாணவியர் தற்கொலை முயற்சி; பொள்ளாச்சி அருகே பரபரப்பு
/
அரசுப்பள்ளியில் 3 மாணவியர் தற்கொலை முயற்சி; பொள்ளாச்சி அருகே பரபரப்பு
அரசுப்பள்ளியில் 3 மாணவியர் தற்கொலை முயற்சி; பொள்ளாச்சி அருகே பரபரப்பு
அரசுப்பள்ளியில் 3 மாணவியர் தற்கொலை முயற்சி; பொள்ளாச்சி அருகே பரபரப்பு
ADDED : செப் 23, 2025 06:17 AM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, அரசுப்பள்ளி வளாகத்துக்குள் மூன்று மாணவியர் சாணிப்பவுடர் கரைத்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே கஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 608 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்நிலையில், நேற்று காலை வகுப்பறை முன், 9ம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவியர் சாணிப்பவுடர் கரைத்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்தனர்.
இதை கண்ட ஆசிரியர்கள் பதட்டமடைந்து, உடனடியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மாணவியரை அழைத்து வந்தனர். அவசர சிகிச்சை பிரிவில் மாணவியர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவல் அறிந்த பெற்றோர், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் திரண்டனர்.
கோமங்கலம்புதுார் போலீசார், சாணிப்பவுடர் கரைசல் குடித்த மாணவியர், ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் கூறியதாவது: பள்ளி மாணவியர், கடந்த, 18ம் தேதி ஆண் நண்பர்களுடன் பேசுவதை கண்ட ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர். படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், 'டிசி'யில், பிளாக் மார்க் விழும். பெற்றோரிடம் தகவல் தெரிவிக்கப்படும் என அறிவுரை வழங்கினர். மேலும், பெற்றோர் ஆசிரியர் கூட்டமும் வரும் வாரத்தில் நடக்க உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், ஆண் நண்பர்களுடன் பேசுவது குறித்து, பெற்றோரிடம் ஆசிரியர்கள் தெரிவித்து விடுவார்களோ என்ற அச்சத்தில், சாணிப்பவுடரை வாங்கி வந்து, பள்ளி வளாகத்தில் கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மாணவியர் ஒரு வித பதற்றத்திலும், ஆசிரியர்களை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு, போலீசார் கூறினர்.
பெற்றோர் புகார் மாணவி ஒருவரின் பெற்றோர், சப் - கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: மகளிடம் விசாரித்த போது, 'எங்களை ஆசிரியர்கள் மிரட்டி எங்கேயும் படிக்க விடாமல் செய்து விடுவோம், எனக்கூறியதால் இதுபோன்ற செயலில் ஈடுபட்டோம் என தெரிவித்தார்.
இது குறித்து விசாரணை செய்து ஆசிரியர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.