தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பி.எம். விக்சித் பாரத் விழாவில் 20 பேருக்கு நியமன ஆணை

பி.எம். விக்சித் பாரத் விழாவில் 20 பேருக்கு நியமன ஆணை

பி.எம். விக்சித் பாரத் விழாவில் 20 பேருக்கு நியமன ஆணை


ADDED : ஜூன் 20, 2026 02:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2026 02:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

 : கோவை: கோவை மண்டல பி.எப்., அலுவலகம் சார்பில், நடந்த ‘பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா’ விழாவில், 10 தனியார் நிறுவனங்கள் சார்பில், 20 புதிய தொழிலாளர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு, மத்திய கூடுதல் பி.எப்., கமிஷனர் சுவகதாராய் தலைமை வகித்தார். கோவை மண்டல கமிஷனர் பிரசாந்த் முன்னிலை வகித்தார்.

இந்த திட்டத்துக்கான நிதி 2400 கோடி ரூபாய் ஊக்கத்தொகையை, டில்லியில் நடந்த  நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வழங்கி, உரையாற்றிய காணொளி காட்சி ஆன்லைன் வாயிலாக திரையிடப்பட்டது. கோவையில் உள்ள, 10 நிறுவன உரிமையாளர்கள், 20 புதிய பணியாளர்களுக்கு பணி ஆணை வழங்கினர்.

இத்திட்டத்தின் கீழ் இந்தாண்டு தமிழகத்தில், 3.5 லட்சம் பேர் பயன்பெறுவார்கள் என்றும், 31 ஆயிரத்து,768 நிறுவன உரிமையாளர்களுக்கு, 63 கோடி ரூபாயும், மூன்று லட்சம் தொழிலாளர்களுக்கு 21 கோடி ரூபாயும் கிடைக்கும் என்று மத்திய கூடுதல் பி.எப்., கமிஷனர் சுவகதாராய் தெரிவித்தார். 

முன்னதாக ‘பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா’ திட்டத்தின் பலன்கள் குறித்து, கோவை பி.எப். மண்டல மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்ரீனிவாசன் விளக்கினார். கோவை எம்.பி.,ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us