ADDED : மே 29, 2026 03:30 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே ஏ.டி.எம்., உடைத்து கொள்ளையடிக்க முயன்ற டாக்ஸி டிரைவரை, போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் அண்ணாஜி ராவ் சாலைப் பகுதியில், கடந்த 25ம் தேதி, தனியார் வங்கி ஏ.டி.எம்.,ல் நுழைந்த மர்ம நபர், இயந்திரத்தை உடைக்க முயன்ற போது, சைரன் ஒலித்ததால் தப்பினார். மேட்டுப்பாளையம் போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்ததில், சம்பவத்தில் ஈடுபட்டது, குன்னுாரை சேர்ந்த டாக்ஸி டிரைவர் தினேஷ், 29 என தெரியவந்தது. இவரை கைது செய்தனர்.---
