ADDED : மே 31, 2026 11:32 PM
அ நிறம் | அளவு
கோவை: அரசு கலைக்கல்லுாரியில் 2025 – 2026ம் கல்வியாண்டில் பணி நிறைவு பெறும் பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா, நேற்று கல்லுாரி வளாகத்தில் நடந்தது. முதல்வர் எழிலி தலைமை வகித்தார்.
தமிழ், தாவரவியல், வேதியியல், வணிகவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10 பேராசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர். பேராசிரியர்கள் விஜயலட்சுமி, சங்கரவடிவு, சந்திரசேகரன், ஜெயக்குமார், பூங்கொடி, ரவிசங்கர், சரோஜினி, லதா, வசந்தா, கலாவதி ஆகியோருக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது.
பொன்னாடை போர்த்தியும், சந்தனமாலை அணிவித்தும் முதல்வர் மற்றும் துறைத்தலைவர்கள் பேராசிரியர்களை வாழ்த்தினர்.
