/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உலக பாரா 'பவர் லிப்டிங்' போட்டி சென்னை வீராங்கனையர் தகுதி
/
உலக பாரா 'பவர் லிப்டிங்' போட்டி சென்னை வீராங்கனையர் தகுதி
உலக பாரா 'பவர் லிப்டிங்' போட்டி சென்னை வீராங்கனையர் தகுதி
உலக பாரா 'பவர் லிப்டிங்' போட்டி சென்னை வீராங்கனையர் தகுதி
ADDED : செப் 30, 2025 01:59 AM

சென்னை,
உலக பாரா 'பவர் லிப்டிங்' போட்டியில், இந்திய அணிக்காக சென்னையைச் சேர்ந்த மூன்று வீராங்கனையர் பங்கேற்று, திறமையை வெளிப்படு த்த உள்ளனர்.
ஆசிய காமன்வெல்த் பாரா போட்டிக்கு முன்னோட்டமாக, சர்வதேச பாராலிம்பிக் குழு சார்பில் உலக பாரா பவர்லிப்டிங் போட்டி, ஆப்ரிக்கா நாடான எகிப்தின் கெய்ரோ மாநகரில் அக்., 6ம் தேதி துவங்கி 19ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், உலகம் முழுதில் இருந்து வீரர் - வீராங்கனையர் பங்கேற்கின்றனர்.
இதில், இந்திய அணி சார்பில் 25 வீரர் - வீராங்கனையர் இடம் பிடித்துள்ளனர். இவர்களில், சென்னையை சேர்ந்த கஸ்துாரி ராஜமணி, நதியா, அருண்மொழி மற்றும் ஊட்டியைச் சேர்ந்த சரவணன் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
இது குறித்து, வீராங்கனை கஸ்துாரி கூறியதாவது:
த மிழகம் சார்பில் நான்கு வீரர்கள் சர்வதேச போட்டிக்கு செல்வது, இதுவே முதல் முறை. என் பயணத்தில் இது நிச்சயம் மறக்க முடியாத போட்டியாக இருக்கும்.
ஆசிய தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறேன். இது எனக்கு சந்தோஷத்தை தருகிறது. ஆரம்ப காலத்தில், தனியாக போட்டிக்கு செல்வேன். தற்போது தமிழகத்தில் சிறந்த வீரர் - வீராங்கனையர் உருவாகியுள்ளனர்.
அடுத்த தலைமுறை வீரர்கள் இன்னும் அதிக பதக்கங்களை வென்று, தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பர். என் அனைத்து வெற்றிக்கும் எனது பயிற்சியாளர் விஜய் சாரதி தான் காரணம். அவர் எங்களுக்காக பல முயற்சிகள், உதவிகள் செய்துவருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.