/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்வாரியம் தோண்டிய பள்ளம் ஒரு வாரமாகியும் மூடாமல் அலட்சியம்
/
மின்வாரியம் தோண்டிய பள்ளம் ஒரு வாரமாகியும் மூடாமல் அலட்சியம்
மின்வாரியம் தோண்டிய பள்ளம் ஒரு வாரமாகியும் மூடாமல் அலட்சியம்
மின்வாரியம் தோண்டிய பள்ளம் ஒரு வாரமாகியும் மூடாமல் அலட்சியம்
ADDED : செப் 04, 2025 03:29 AM

எண்ணுார், மின்வாரிய பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளம், ஒரு வாரமாகியும் மூடப்படாததால், போக்குவரத்து வசதியின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவொற்றியூர் மண்டலம், நான்காவது வார்டு, எர்ணாவூர், கிரிஜா நகர் - மல்லிகை தெருவில், 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த தெரு சந்திப்பில், மின்வாரிய பழுதுபார்ப்பிற்காக, பள்ளம் தோண்டி ஒயர் பதிக்கும் பணி நடந்தது.
பள்ளம் தோண்டி ஒரு வாரம் கடந்த நிலையில், பணிகளை முடிக்காமல் தோண்டிய பள்ளத்தை அப்படியே விட்டுள்ளனர். இதனால், அந்த தெருவிற்கான போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. வேறு வழியின்றி அப்பகுதி மக்கள், கடை வீதிகள், மருத்துவமனை, வேலைக்கு நடந்தே சென்று வருகின்றனர்.
அவ்வபோது, திடீரென மழை பெய்வதால், மின்வாரிய பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கி, மின்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது என, அந்த பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
எனவே, சம்மந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் கவனித்து, பழுது பார்ப்பு பணியை விரைந்து முடித்து, தோண்டிய பள்ளத்தை மூடி சமன்படுத்திக் கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.