/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலம் * குஜராத்தில் தயாராகும் இரும்பு துாண்கள்
/
தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலம் * குஜராத்தில் தயாராகும் இரும்பு துாண்கள்
தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலம் * குஜராத்தில் தயாராகும் இரும்பு துாண்கள்
தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலம் * குஜராத்தில் தயாராகும் இரும்பு துாண்கள்
ADDED : செப் 24, 2025 12:36 AM

சென்னை :தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பால கட்டுமான பணிக்கு, குஜராத் மாநிலத்தில் தயாராகும் இரும்பு துாண்களின் பலம் குறித்து, அமைச்சர் வேலு மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சென்னை அண்ணாசாலையில், வாகனங்கள் நடமாட்டம் அதிகரிப்பால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான, 3.20 கி.மீ., துாரத்தை கடக்க வாகனங்கள், 30 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளது.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நெடுஞ்சாலைத்துறை வாயிலாக, 621 கோடி ரூபாயில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
மெட்ரோ ரயில் சுரங்கத்தின் மேல் பகுதியில், நவீன தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி, நாட்டிலேயே முதல் முறையாக இந்த மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.
கட்டுமானத்திற்கு இரும்பு துாண்களும், முன்வார்ப்பு கான்கீரிட் தளவாடங்களும் பயன்படுத்தப்பட உள்ளது. சைதாபேட்டை வரை பல இடங்களில் இரும்பு துாண்கள் நிறுவப்பட்டுள்ளன.
இவை, மும்பையில் உள்ள தொழிற்சாலையில் இருந்து தயாரித்து எடுத்துவரப்பட்டவை. மீத கட்டுமான பணிகளை முடிப்பதற்கு, குஜராத் மாநிலம் வதோததராவில் உள்ள தொழிற்சாலையில், இரும்பு துாண்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
ஆங்கிலேயர் ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட இரும்பு சாரங்களை போல, நுாற்றாண்டுகள் தாங்கும் வகையில், பலமானதாக துாண்கள் இருக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
இதையடுத்து, குஜராத் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைக்கு, நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு, தலைமை பொறியாளர் சத்திய பிரகாஷ், கண்காணிப்பு பொறியாளர் சரவண செல்வம் மற்றும் தொழிற்நுட்ப வல்லுனர் குழுவினர், நேற்று சென்றனர்.
துாண்கள் அமைப்பதற்கு பயன்படுத்தப்படும் இரும்பு, தயாரிக்கப்பட்டு வரும் துாண்களின் பலம் உள்ளிட்டவை குறித்து தொழிற்சாலை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். தரத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும், நிறுவனத்திற்கு குழுவினர் அறிவுறுத்தினர்.
***