/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குயின்ஸ் மேரிஸ் அணி மகளிர் வாலிபாலில் 2ம் இடம்
/
குயின்ஸ் மேரிஸ் அணி மகளிர் வாலிபாலில் 2ம் இடம்
ADDED : செப் 26, 2025 02:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை :சென்னை பல்கலை சார்பில், சென்னை 'ஏ' மண்டல அளவிலான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி, அடையாறில் உள்ள பாட்ரீசியன் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடந்தது.
இதில், சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 10க்கும் அதிகமான அணிகள் பங் கேற்றன. போட்டி முடிவில், எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரி அணி முதல் இடமும், குயின்ஸ் மேரிஸ் கல்லுாரி அணி இரண்டாம் இடமும் பிடித்து அசத்தின.
இதன் பரிசளிப்பு விழாவில், பாட்ரீசியன் கல்லுாரி இயக்குநர் ரமேஷ் அமலநாதன், துணை முதல்வர் ஆரோக்கியமேரி கீதா தாஸ் உள்ளிட்டோர், வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.