புது வண்ணை - ஆர்.கே.நகர் இடையே மேம்பால பணி: போக்குவரத்து மாற்றம்
புது வண்ணை - ஆர்.கே.நகர் இடையே மேம்பால பணி: போக்குவரத்து மாற்றம்
ADDED : ஜூன் 05, 2026 04:28 AM
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் புது வண்ணாரப்பேட்டை, ஆர்.கே.நகர் ரயில்வே குறுக்கே, வைத்தியநாதன் பாலம் - ஆர்.கே.நகர் சந்திப்பு வரையில் மேம்பாலம் கட்டுமான பணி, 6ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
இதற்காக, பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்தில் சில மாற்றங்களை போலீசார் அமல்படுத்தி உள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
ஐ.ஓ.சி.எல்., இருந்து கொருக்குப்பேட்டை செல்லும் அனைத்து வாகனங்களும், வைத்தியநாதன் மேம்பாலத்தில் இடதுபுறம் திரும்பி டி.எச்., சாலை வழியாக கொருக்குப்பேட்டை சந்திப்பை சென்றடையும்.
ஆர்.கே.,நகர் புதிய மேம்பாலத்தில் இருந்து, ஐ.ஓ.சி.எல்., செல்லும் அனைத்து இலகுரக வாகனங்களும் ஆர்.கே., நகர் சந்திப்பில் வலது புறம் திரும்பி கொருக்குப்பேட்டை ரயில்வே கேட் வழியாக செல்ல வேண்டும். பின் டி.எச்., சாலை, வைத்தியநாதன் மேம்பாலம் வலதுபுறம் திரும்பி ஐ.ஓ.சி.எல்., சந்திப்பை அடையலாம்
ஆர்.கே.,நகர் புதிய மேம்பாலத்திலிருந்து ஐ.ஓ.சி.எல்., செல்லும் அனைத்து இலகுரக வாகனங்களும், மேம்பாலத்தில் இருந்து இறங்கி, இடதுபுறம் திரும்பி அன்னை சத்யா நகர் வழியாக ஐ.ஓ.சி.எல்., செல்லலாம்
மீனாம்பாள் மேம்பாலம் வழியாக ஐ.ஓ.சி.எல்., செல்லும், அனைத்து இலகுரக வாகனங்களும் கே.என்.எஸ்., டிப்போ வலதுபுறம் அல்லது ஆர்.கே.நகர் சந்திப்பு இடதுபுறம் திரும்பி, சுண்ணாம்பு கால்வாய் சாலை வழியாக வலதுபுறம் திரும்பி ஐ.ஓ.சி.எல்., சந்திப்பை அடையலாம்
பேசின் மேம்பாலம் மூலக்கொத்தளம் வழியாக, ஐ.ஓ.சி.எல்.,செல்லும் அனைத்து பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களும் நேராக மின்ட் ஜங்ஷன் சென்று, இடதுபுறம் திரும்பி கண்ணன் வளைவு, டி.எச்., சாலை, வைத்தியநாதன் மேம்பாலம் வழியாக செல்லலாம்
மூலக்கொத்தளம் வழியாக ஐ.ஓ.சி.எல்., செல்லும் அனைத்து இலகுரக வாகனங்களும், ஆர்.கே., நகர் சந்திப்பு இடதுபுறம் திரும்பி, சுண்ணாம்பு கால்வாய் சாலை - அன்னை சத்யா நகர் வழியாக வலது புறம் திரும்பி ஐ.ஓ.சி.எல்.,செல்லலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
