தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வழிகாட்டி:திறமைகளை வளர்த்து கொள்வது அவசியம்

வழிகாட்டி:திறமைகளை வளர்த்து கொள்வது அவசியம்

வழிகாட்டி:திறமைகளை வளர்த்து கொள்வது அவசியம்


UPDATED : ஜூன் 13, 2026 11:56 PM

ADDED : ஜூன் 13, 2026 11:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 13, 2026 11:56 PM ADDED : ஜூன் 13, 2026 11:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குநர் டாக்டர் ஜி.நாகராஜன் பேசியதாவது:

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில்,'சாய்ஸ் பில்லிங்' முக்கியம். சாய்ஸ் பில்லிங் செய்யும் முன், எந்த கல்லுாரி, எந்த பிரிவு என்ற பட்டியல் தாயார் செய்து, தெளிவாக பதிவு செய்ய வேண்டும். எவ்வளவு சாய்ஸ் கொடுக்கிறீர்களோ, அவ்வளவு நல்லது.

கம்பியூட்டர் சயின்ஸ் பயில விரும்புவர்கள், அந்த பாடப்பிரிவு உள்ள பல்வேறு கல்லுாரிகளை தேர்வு செய்யலாம். சாய்ஸ் பில்லிங் செய்ய மூன்று நாள் காலம் அவகாசம் உள்ளது. முதல் நாளிலேயே லாக் செய்ய வேண்டாம்.

கவனமாக கல்லுாரி, பாடப்பிரிவை தேர்வு செய்து, மூன்றாம் நாளில் நீங்களே, 'லாக்' செய்யுங்கள். நீங்கள் லாக் செய்யாவிட்டால், ரேங்கிக், மதிப்பெண்ணிகு ஏற்ப, கணினி தானாக லாக் செய்துக்கொள்ளும்.

மூன்று நாட்கள் சாஸ்ஸ் பில்லிங் செய்தபின், நான்கு, ஐந்தாம் நாள் உங்கள் சீட்டை உறுதி செய்ய வேண்டும். இல்லையேல், அந்த சீட் கிடைக்காமல், வேறு நபருக்கு சென்றுவிடும்.

ஆசிரியர், ஆராய்சியாளர், பொறியாளர், தொழில் முனைவோர், விஞ்ஞானி என ஐந்து பிரிவுகளில், இன்ஜினியரிங் தொழில் வாய்புக்கள் அதிகம் உள்ளன.

தொழில் நிறுவனங்கள் மாணவர்களிடம் இருந்து அணுகுமுறை, திறன், அறிவு ஆகியவற்றை எதிர்பார்கின்றன. எனவே, மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே, தங்கள் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us