/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பிளாஸ்டிக் கழிவில் தீப்பற்றி வெடித்து சிதறிய மின் பெட்டி

/

பிளாஸ்டிக் கழிவில் தீப்பற்றி வெடித்து சிதறிய மின் பெட்டி

பிளாஸ்டிக் கழிவில் தீப்பற்றி வெடித்து சிதறிய மின் பெட்டி

பிளாஸ்டிக் கழிவில் தீப்பற்றி வெடித்து சிதறிய மின் பெட்டி


ADDED : ஜூன் 07, 2025 12:15 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூளை, சூளை அங்காளம்மன் கோவில், வடக்கு மாட வீதியில் உள்ள மின் பகிர்மான பெட்டியில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால், அந்த தெரு உட்பட, சுற்றுவட்டாரத்தில் இருந்த, 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

உடனே, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், மின் பகிர்மான பெட்டி முழுதும் எரிந்து சாம்பலானது.

இதையடுத்து, நேற்று காலை 8:00 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த சூளை மின்வாரிய ஊழியர்கள், புதிதாக மின் பகிர்மான பெட்டியை அமைத்து, மாலை 6:00 மணிக்கு மேல் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கினர்.

மின் பகிர்மான பெட்டிக்கு அருகே உள்ள காயலான் கடையின் பிளாஸ்டிக் கழிவுகளை குவித்து வைத்திருந்ததும், பைபரால் ஆன கேபிள்களுமே, இந்த தீக்கு காரணம் என்று மின் வாரிய அதிகாரிகள் கூறினர்.