/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூரை பெயர்ந்து டாக்டர் காயம்
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூரை பெயர்ந்து டாக்டர் காயம்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூரை பெயர்ந்து டாக்டர் காயம்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூரை பெயர்ந்து டாக்டர் காயம்
ADDED : செப் 24, 2025 12:38 AM

வில்லிவாக்கம் :மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவர் அறையில் கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில், டாக்டர், செவிலியர் காயமடைந்தனர்.
அண்ணா நகர் மண்டலம், 95வது வார்டில், வில்லவாக்கம், மண்ணடி தெருவில், சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது.
தரை மற்றும் முதல் தளம் கொண்ட நிலையத்தில், நேற்று காலை 9:15 மணியளவில் டாக்டர் ஷாலினி அறையில் அமர்ந்திருந்தார். அப்போது, திடீரென அறையில் கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து மேசையின் மீது விழுந்தது.
இதில், டாக்டர் ஷாலினி மற்றும் அருகில் இருந்த செவிலியர் ஒருவருக்கு தலை மற்றும் தோள்பட்டையில் ஏற்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி அதிககாரிகளிடம் கேட்ட போது, ' கடந்த 2022ல் கட்டிய கட்டடத்தில் உறுதி தன்மை நல்ல நிலையில் உள்ளது. கூரையில் சிறிய இடத்தில் மட்டும் சிமென்ட் பூச்சு பெயர்ந்தது; கான்கிரீட் உறுதியாக உள்ளது' என்றனர்.
--------------