தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பைக்கில் சென்ற மூதாட்டி தவறி விழுந்து பலி

பைக்கில் சென்ற மூதாட்டி தவறி விழுந்து பலி

பைக்கில் சென்ற மூதாட்டி தவறி விழுந்து பலி


UPDATED : ஜூன் 15, 2026 04:13 PM

ADDED : ஜூன் 15, 2026 03:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2026 04:13 PM ADDED : ஜூன் 15, 2026 03:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொடுங்கையூர்: கொடுங்கையூர், கட்டப்பொம்மன் மூன்றாவது தெருவைச் சேர்ந்த சுரேஷ், 60, அவரது மனைவி தனலட்சுமி, 56, ஆகியோர், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

வீட்டருகே, சாலையின் குறுக்கே ஓடிய அடையாளம் தெரியாத நபர் மீது மோதாமல் இருக்க, சுரேஷ் வாகனத்தில் பிரேக் அழுத்தினார்.

இதில் தடுமாறி விழுந்த தனலட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தபோது, டாக்டர்கள் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. புளியந்தோப்பு போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us