UPDATED : ஜூன் 02, 2026 05:07 PM
ADDED : ஜூன் 02, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
மடிப்பாக்கம்: மடிப்பாக்கம், சீனிவாசா நகர், கவிமணி தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 50. இவரது வீட்டில் கட்டுமான பணிக்காக வைத்திருந்த இரும்பு கம்பிகள், அவ்வப்போது திருடப்பட்டு வந்தன.
கடந்த 29ல், இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், மணிவண்ணன் வீட்டு வாசலில் இருந்த 50 கிலோ இரும்பு கம்பிகளை திருடி தப்பினர்.
மணிவண்ணன் புகாரை பெற்ற மடிப்பாக்கம் போலீசார், திருட்டில் ஈடுபட்ட வேளச்சேரி மணிகண்டன், 22, பிரவித், 24, ஹரி பிரதீஷ்குமார், 22, ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். 7,500 ரூபாய் மதிப்புள்ள 50 கிலோ இரும்பு கம்பிகளை மீட்டனர்.
