/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லோக் அதாலத்தில் ரூ.53.01 கோடி இழப்பீடு
/
லோக் அதாலத்தில் ரூ.53.01 கோடி இழப்பீடு
ADDED : செப் 14, 2025 03:19 AM

சென்னை:சென்னையில் உள்ள சிறு வழக்குகள் நீதிமன்றத்தில், நேற்று நடந்த லோக் அதாலத் வாயிலாக, 1,026 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு, 53.01 கோடி ரூபாய் வரை இழப்பீடுகள் வழங்கப்பட்டன.
நாடு முழுதும் உள்ள நீதிமன்றங்களில், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவரும் வகையில், ஆண்டுக்கு நான்கு முறை தேசிய லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது.
அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறு வழக்குகள் நீதிமன்றத்தில், நேற்று லோக் அதாலத் நடந்தது. விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட 1,745 வழக்குகளில், 1,026 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
இதன் வாயிலாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு, 53 கோடியே ஒரு லட்சத்து 1,357 ரூபாய் வரை, இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
இழப்பீடு தொகைகளை, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, தமிழக சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதிகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில், மாவட்ட சட்ட உதவி ஆலோசனை மைய செயலர் கவிதா, சிறு வழக்குகள் நீதிமன்ற பதிவாளர் திவ்யா தயானந்த் ஆகியோர் பங்கேற்றனர்.