/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சென்னை விமானம் அவசரமாக பெங்களூரில் தரையிறக்கம்

/

சென்னை விமானம் அவசரமாக பெங்களூரில் தரையிறக்கம்

சென்னை விமானம் அவசரமாக பெங்களூரில் தரையிறக்கம்

சென்னை விமானம் அவசரமாக பெங்களூரில் தரையிறக்கம்


ADDED : ஜூன் 20, 2025 12:18 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, அசாம் மாநிலம், கவுகாத்தியில் இருந்து, 170 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணியர் விமானம், நேற்று மாலை 4:45 மணிக்கு, சென்னை நோக்கி புறப்பட்டது.

இரவு 7:45 மணிக்கு, சென்னையில் தரையிறங்க வேண்டிய அந்த விமானம், நடுவானில் பறந்துக்கொண்டிருந்தபோது, எரிபொருள் குறைவாக இருப்பது விமானிக்கு தெரியவந்தது.

எனவே, சென்னைக்கு விமானம் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். விமானத்தை பெங்களூருவில் தரையிறக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

அதன்படி, இரவு 8:00 மணியளவில் அந்த விமானம் பெங்களூரில் தரையிறங்கியது. அங்கு விமானத்திற்கு எரிபொருள் நிரப்பிவிட்டு, தாமாதமாக சென்னை செல்லும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.