sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

  அவசர கதியில் ஆவடி பேருந்து நிலையம்... இடமாற்றம்: முன்னேற்பாடு இல்லாததால் பயணியர் அவதி

/

  அவசர கதியில் ஆவடி பேருந்து நிலையம்... இடமாற்றம்: முன்னேற்பாடு இல்லாததால் பயணியர் அவதி

  அவசர கதியில் ஆவடி பேருந்து நிலையம்... இடமாற்றம்: முன்னேற்பாடு இல்லாததால் பயணியர் அவதி

  அவசர கதியில் ஆவடி பேருந்து நிலையம்... இடமாற்றம்: முன்னேற்பாடு இல்லாததால் பயணியர் அவதி

3


UPDATED : செப் 14, 2025 03:49 AM

ADDED : செப் 14, 2025 02:40 AM

Google News

UPDATED : செப் 14, 2025 03:49 AM ADDED : செப் 14, 2025 02:40 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி:ஆவடி பேருந்து நிலையத்தில் புதிய கட்டுமான பணி நடந்து வரும் நிலையில், தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து, இன்று முதல் மாநகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. போதிய முன்னேற்பாடு, பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் அவசர கதியில் இந்நிலையத்தை அமைத்துள்ளதால், பயணியர் அவதிப் படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தவிர, பேருந்துகள் வந்து செல்ல இரு வழி மட்டுமே இருப்பதால், ஒரே நேரத்தில் பேருந்துகள் வரும் போது, சி.டி.எச்., சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம். சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலை, பக்தவத்சலபுரத்தில் 1.93 ஏக்கர் பரப்பளவில் ஆவடி பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து கோயம்பேடு, திருவான்மியூர், தாம்பரம், திருவள்ளூர் உள்ளிட்ட 55 வழித்தடங்களுக்கு, 221 பேருந்துகளில் 1,274 சர்வீஸ் இயக்கப் படுகின்றன.

தவிர, செங்கோட்டை, துாத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும் தொலைதுார பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கோரிக்கை தினந்தோறும் ஆறு லட்சத்திற்கும் அதிகமான பயணியர் வந்து செல்வதற்கு ஏற்ற கட்டமைப்பு இந்நிலையத்தில் இல்லை; தவிர, போதுமான அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால், ஆவடி பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என, பயணியர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எனும் சி.எம்.டி.ஏ., சார்பில், 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையத்திற்கான ஆரம்ப கட்ட பணி ஜூன் மாதம் துவங்கியது.

மொத்தம் 22,000 சதுர அடியில் ஐந்து நடைமேடைகள், ஒரே நேரத்தில் 22 பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது.

இதன் கட்டுமான பணிகள் துவங்கி நான்கு மாதங்கள் ஆன நிலையில், பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல், அதே இடத்தில் இருந்து பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தன. இதனால், பேருந்துகள் பணிமனை உள்ளே செல்ல முடியாமல் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால், பிரச்னைக்கு தீர்வு காணவும், கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும், தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என, கடந்த ஜூன் 26ம் தேதி, நம் நாளிதழில் செய்தி வெளியானது.

அதன் எதிரொலியாக, பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் காலி இடத்தில், தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, 'ஜாக் சிட்டி' எனும் தனியாருக்கு சொந்தமான காலி இடம் சுத்தம் செய்யப்பட்டது. அங்கு கூடாரம் அமைப்பது உட்பட எந்த அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளாமல், தற்காலிக பேருந்து நிலையத்தை அவசர கதியில் நேற்று திறந்துள்ளனர். அதிகாரிகளின் இந்த திட்டமிடாத அவசர செயலால், கடும் இடையூறு ஏற்படுவதாக பயணியர் குற்றம் சாட்டுகின்றனர்.

பயணியர் கூறியதாவது:

தற்காலிக பேருந்து நிலையத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சிறுநீர் கழிப் பதற்கான கட்டமைப்பு, சொற்ப எண்ணிக்கையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. தினந்தோறும் ஆறு லட்சம் பயணியர் வரும் நிலையில், இது போதுமானதா என தெரியவில்லை.

குடிநீர் வசதி, நிழற்குடை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. குறிப்பாக கூரைகள் அமைக்கப்படவில்லை. இதனால், மழை, வெயிலில் பயணியர் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், உள்ளே வர ஒரு வழி, வெளியேற ஒரு வழி மட்டுமே உள்ளதால், அந்நேரத்தில் அங்குள்ள சி.டி.எச்., சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது.

விபத்து அபாயம் இந்த சாலையில் உள்ள மைய தடுப்பை இடித்து அகற்றியிருந்தாலும், பேருந்து வந்து செல்லும்போது மற்ற வாகன ஓட்டிகள் செல்ல சிரமம் ஏற்படுவதோடு, விபத்து அபாயமும் உள்ளது.

குறிப்பாக, தற்காலிக பேருந்து நிலையத்தை ஒட்டி பாழடைந்த கட்டடம் உள்ளது. அதை பயன்படுத்தி, பயணியர் போல் தற்காலிக பேருந்து நிலையம் வந்து, சமூக விரோத செயல்களில் ஈடுபடலாம் என அஞ்சப்படுகிறது.

பயணியருக்கு தகுந்த முன்னேற்பாடுகள், அடிப்படை வசதிகள் ஏற்பாடு இல்லாத தற்காலிக பேருந்து நிலையத்தில், போது மான பாதுகாப்பு வசதிகளை அளிக்க வேண்டும். இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரி சலுக்கும் தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தேவைக்கு ஏற்ப பஸ் இயக்கம்

ஆவடியில் தற்போதுள்ள பேருந்து நிலையம் மேம்படுத்தப்பட்டு, பல்வேறு வசதிகளுடன் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான பணிகள் துவங்க உள்ளன. இதனால், இந்த பேருந்து நிலையத்தில் இருந்து, 100 மீட்டர் துாரத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆவடியில் இருந்து இயக்கப்படும் அனைத்து மாநகர பேருந்துகளும் இங்கிருந்து தடையின்றி இயக்கப்படும். பயணியர் தேவை அதிகரிக்கும் போது, கூடுதலாக மாநகர பேருந்துகளை இயக்கவும் நிர்வாகம் தயாராக உள்ளது.

- மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள்

போலீசாரை நியமிக்க வேண்டும்

தற்காலிக பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பேருந்துகள் வந்து செல்வதில் சி.டி.எச்., சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படாமல், போதிய போக்குவரத்து போலீசாரை நியமித்து கண்காணிக்க வேண்டும். தேவைப்பட்டால், பட்டாபிராம், திருநின்றவூர் பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கவும், பட்டாபிராம் பேருந்து நிலையத்தில் மாதாந்திர பயணச்சீட்டு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சடகோபன், 65, சமூக ஆர்வலர், பட்டாபிராம்.






      Dinamalar
      Follow us