/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நடைபாதையில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பையால் அசுத்தம்

/

நடைபாதையில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பையால் அசுத்தம்

நடைபாதையில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பையால் அசுத்தம்

நடைபாதையில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பையால் அசுத்தம்

ADDED : மே 12, 2025 12:55 AM

Google News

ADDED : மே 12, 2025 12:55 AM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி சிப்காட் செல்லும் அண்ணா சாலை பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இங்கு உள்ள தொழிற்சாலைகளுக்கு பலரும் இந்த சாலை வழியாக நடந்து சென்று வருகின்றனர். இந்த சாலையை ஒட்டி மாநில வன ஆராய்ச்சி நிலையம் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது.

இங்கு சுற்றியுள்ள வீடுகள் மற்றும் வணிக கட்டங்களில் இருந்து சேகாரமாகும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவு கொட்டப்பட்டு வருகிறது.

இதை மாடுகள், தெருநாய்கள் கிளறுவதால் குப்பை காற்றில் பறந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.