/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பிளஸ் - 2வில் முதல் 5 இடம் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

/

பிளஸ் - 2வில் முதல் 5 இடம் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

பிளஸ் - 2வில் முதல் 5 இடம் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

பிளஸ் - 2வில் முதல் 5 இடம் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை


ADDED : ஜூன் 11, 2025 02:17 AM

Google News

ADDED : ஜூன் 11, 2025 02:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த தண்டலம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அரசு, தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பு, பிளஸ் - 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, முதல் ஐந்து இடங்களை பிடித்த மாணவ - மாணவியருக்கு ஊக்கத்தொகை, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

தண்டலம் ஊராட்சி தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் உள்ளிட்டோர் பங்கேற்று, முதல் ஐந்து இடங்களை பிடித்த மாணவ - மாணவியருக்கு ஊக்கத்தொகை, பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர்.

கல்லுாரி கட்டணம் செலுத்த முடியாமல் பாதியில் நின்ற மாணவர் ஒருவருக்கு, 15,000 ரூபாய் நிதி அளிக்கப்பட்டது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு கல்வி உபகரணங்கள், புத்தகப் பை வழங்கப்பட்டன.

மாணவி கவுரவிப்பு


தண்டலம் ஊராட்சி, எடையான்குப்பம் இருளர் பகுதியைச் சேர்ந்த ராமதுரை - கவிதா தம்பதியின் மகள் ஆனந்தி. இவர் திருப்போரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் - 2 தேர்வில், 415 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.

மேல் படிப்புக்கு, செங்கல்பட்டு அரசு கலைக் கல்லுாரியில், பி.ஏ., பொலிடிக்கல் சயின்ஸ் படிக்க வாய்ப்பு கிடைத்தது.

இப்பகுதியில் கல்லுாரி படிக்கும் முதல் மாணவியாக ஆனந்தி உள்ளதால், ஊராட்சி நிர்வாகம் சார்பில் இவருக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தனர்.