/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீட்டில் துாங்கிய தாய், மகளிடம் 6 சவரன் நகை பறிப்பு
/
வீட்டில் துாங்கிய தாய், மகளிடம் 6 சவரன் நகை பறிப்பு
வீட்டில் துாங்கிய தாய், மகளிடம் 6 சவரன் நகை பறிப்பு
வீட்டில் துாங்கிய தாய், மகளிடம் 6 சவரன் நகை பறிப்பு
ADDED : செப் 16, 2025 11:15 PM
திருப்போரூர்:மானாமதி கிராமத்தில், வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த தாய், மகளிடம், 6 சவரன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்போரூர் ஒன்றியம், மானாமதி கிராமத்தைச் சேர்ந்தவர் திருவேங்கடம், 53; டீக்கடை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி உமா, 46. திருமணமான இவர்களது மகள் கவுதமி, 26. சமீபத்தில் அம்மா வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, அனைவரும் வீட்டில் துாங்கியுள்ளனர்.
நள்ளிரவு 1:30 மணிஅளவில், வீட்டின் பின்புற கதவை கடப்பாரை மூலமாக உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் இருவர், உமா கழுத்திலிருந்த 1 சவரன் மற்றும் அவரது மகள் கவுதமி கழுத்திலிருந்த 5 சவரன் செயினை பறித்து உள்ளனர்.
அப்போது உமா, கவுதமி இருவரும் கூச்சலிட்டதால், அருகிலுள்ள அறையில் துாங்கிக் கொண்டிருந்த திருவேங்கடம் ஓடி வந்து, திருடர்களைப் பிடிக்க முயன்றுள்ளார்.
ஆனால், அவர்கள் முகமூடி அணிந்து, உடல் முழுதும் எண்ணெய் பூசியிருந்ததால், செயினை அறுத்துக் கொண்டு தப்பியுள்ளனர்.
இதேபோல, அப்பகுதியில் பூங்காவனம் என்பவரது வீட்டிலும், பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது. அந்த வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் ஏதும் இல்லாததால், திரும்பிச் சென்று உள்ளனர்.
இதுகுறித்த புகாரில், மானாமதி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.