தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/இரண்டாவது சுற்றில் பென்சிக்: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்

இரண்டாவது சுற்றில் பென்சிக்: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்

இரண்டாவது சுற்றில் பென்சிக்: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்


ADDED : மே 24, 2026 11:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2026 11:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இரண்டாவது சுற்றுக்கு சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் முன்னேறினார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக், ஆஸ்திரியாவின் சின்ஜா கிராஸ் மோதினர். அபாரமாக ஆடிய பென்சிக் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்றொரு போட்டியில் சீனாவின் ஜின்யு வாங், ஆஸ்திரியாவின் லில்லி டாக்கர் மோதினர். இதில் ஜின்யு வாங் 6-3, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, 2வது சுற்றுக்கு முன்னேறினார். செக்குடியரசின் மேரி பவுஸ்கோவா 6-3, 6-1 என, இத்தாலியின் லுாசியா பிரான்செட்டியை வென்றார்.

மற்றொரு முதல் சுற்றில் அமெரிக்காவின் கேட்டி மெக்னாலி 3-6, 7-6, 6-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ல்ஜனோவிச்சை வீழ்த்தினார். உக்ரைனின் மார்டா கோஸ்டியுக் 6-2, 6-3 என ஸ்பெயினின் ஒக்சானா செலெக்மெடேவாவை வென்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷ்யாவின் காரென் கச்சானோவ், பிரான்சின் ஆர்தர் ஜியா மோதினர். அபாரமாக ஆடிய கச்சானோவ் 6-3, 7-6, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-3, 6-4, 6-2 என, பிரான்சின் பெஞ்சமின் போன்சியை வீழ்த்தினார்.

மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த், கனடாவின் கேப்ரியல் டியாலோ மோதினர். இதில் டக்வொர்த் 6-3, 4-1 என முன்னிலையில் இருந்த போது டியாலோ காயத்தால் பாதியில் விலகினார். இதனையடுத்து டக்வொர்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us