/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பாரா தடகளம்: ரிங்கு 'தங்கம்' * இந்தியாவுக்கு இரண்டு பதக்கம்
/
பாரா தடகளம்: ரிங்கு 'தங்கம்' * இந்தியாவுக்கு இரண்டு பதக்கம்
பாரா தடகளம்: ரிங்கு 'தங்கம்' * இந்தியாவுக்கு இரண்டு பதக்கம்
பாரா தடகளம்: ரிங்கு 'தங்கம்' * இந்தியாவுக்கு இரண்டு பதக்கம்
ADDED : செப் 29, 2025 10:54 PM

புதுடில்லி: உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் மூன்றாவது நாளில் இந்தியா இரண்டு பதக்கம் வென்றது. .
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப் 12வது சீசன் நடக்கிறது. நேற்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப். 46 பிரிவு பைனல் நடந்தது. இந்தியாவின் ரிங்கு, நான்காவது வாய்ப்பில் அதிகபட்சம் 66.37 மீ., எறிந்து, சாம்பியன்ஷிப் சாதனையுடன் தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.
இப்பிரிவில் உலக சாதனை (2023ல்) படைத்த இந்தியாவின் சுந்தர் சிங் குர்ஜார், ஐந்தாவது வாய்ப்பில் அதிகபட்சம் 64.76 மீ., துாரம் எறிந்தார். இரண்டாவது இடம் பெற்று, வெள்ளி வென்றார். கியூபா வீரர் வரோனா கொன்சாலஸ் (63.34 மீ.,) வெண்கலம் வசப்படுத்தினார்.
தயவந்தி ஏமாற்றம்
பெண்களுக்கான எப் 64 வட்டு எறிதலில் இந்தியாவின் தயவந்தி, 27.94 மீ., துாரம் எறிந்து நான்காவது இடம் பெற, வெண்கல வாய்ப்பு நழுவியது. இருப்பினும் ஆசிய அளவில் இது சிறந்த துாரம் ஆனது.
டெனிஸ் சாதனை
ஆண்கள் குண்டு எறிதல் (எப் 40) போட்டியில் ரஷ்யாவின் டெனிஸ் ஜினெஸ்டிலவ், 3, 4வது வாய்ப்பில் 11.85, 11.92 மீ., துாரம் எறிந்து அடுத்தடுத்து புதிய உலக சாதனை படைத்து, தங்கம் வென்றார்.
6வது இடம்
இந்தியா இதுவரை தலா 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 5 பதக்கம் வென்று பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியது.
சீனா (4 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம், மொத்தம் 14), பிரேசில் (4+7+2=13), போலந்து (4+0+4=8) அணிகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன.